Published:Updated:

பானிபூரியால் நிகழ்ந்த சோகம்; மனைவி தற்கொலை; அதிர்ச்சியில் கணவன்; போலீஸ் விசாரணை!

தற்கொலை
தற்கொலை ( Representational image )

`எதற்காக வாங்கி வந்தீர்கள்' என்பதற்கு கஹிநாத்தால் சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை. இரவு சாப்பாடு எடுத்துக் கொடுக்காமல் பிரதிக்‌ஷா படுத்துவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மஹாராஷ்டிரா மாநிலம், புனே, பாரதி வித்யாபீட் பகுதியில் வசிப்பவர் கஹிநாத். இவரின் மனைவி பிரதிக்‌ஷா. இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. நன்றாகப் படித்த கஹிநாத் புனேயில் பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். கொரோனா காரணமாக அவரின் மனைவி குழந்தையுடன் கிராமத்தில் தங்கியிருந்தார்.

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்
`சந்தோஷமாகத்தான் வாழ்ந்துவந்தோம்!’ - தூக்கிட்டு  தம்பதி தற்கொலை; கலங்கவைத்த கடிதம்

திருமணத்தின்போதிருந்தே கணவன், மனைவி இடையே சிறு சிறு பிரச்னைகளில் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கஹிநாத் தன் மனைவியை கிராமத்திலிருந்து புனே அழைத்து வந்தார். வழக்கமாக வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மனைவி, குழந்தைக்கு ஏதாவது வாங்கிச்செல்வது வழக்கம். அதே நினைப்பில் மனைவிக்குப் பிடிக்குமே என பானிபூரி வாங்கிச் சென்றார். வீட்டுக்குச் சென்று மனைவியிடம் அதைக் கொடுத்ததும், "வீட்டில்தான் சமையல் செய்து வைத்திருக்கிறேனே... பிறகு எதற்கு இதை வாங்கி வந்தீர்கள்" என்று கேட்டு பிரதிக்‌ஷா சண்டையிட்டார். இதில் கணவன், மனைவிக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 'எதற்காக வாங்கி வந்தீர்கள்' என்பதற்கு கஹிநாத்தால் சரியான விளக்கம் கொடுக்க முடியவில்லை. இரவு சாப்பாடு எடுத்துக் கொடுக்காமல் பிரதிக்‌ஷா படுத்துவிட்டார். காலையில் கஹிநாத் வேலைக்குச் செல்லும்போதும் சாப்பாடு கொடுத்துவிடவில்லை. வீட்டில் கோபத்துடன் இருந்த பிரதிக்‌ஷா விஷத்தைக் குடித்துவிட்டார். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். இது குறித்து பிரதிக்‌ஷாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கஹிநாத்தைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு