Published:Updated:

கணவனின் மரண செய்தியைக் கேட்ட சில மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மனைவி மரணம்! - மும்பையில் சோகம்

கணவன் மனைவி

மும்பையில் கணவனின் மரண செய்தியைக் கேட்ட மனைவி சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கணவனின் மரண செய்தியைக் கேட்ட சில மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மனைவி மரணம்! - மும்பையில் சோகம்

மும்பையில் கணவனின் மரண செய்தியைக் கேட்ட மனைவி சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Published:Updated:
கணவன் மனைவி

மும்பை, விக்ரோலி பகுதியில் வசித்தவர் பிந்து கோஷ் (45). இவர் மனைவி பிரமிளா (42). இவர்களுக்கு 21, 18 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். பிந்து கோஷுக்கு காலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் அருகிலிருக்கும் அம்பேத்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனலிக்காமல் மாரடைப்பு காரணமாக இறந்துபோனார். பிரமிளா தொடர்ந்து மருத்துவமனையிலேயே விடாது அழுதுகொண்டேயிருந்தார்.

கணவன் - மனைவி
கணவன் - மனைவி

அவரை உறவினர்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துவந்தனர். இந்த நிலையில், பிரமிளா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்தவதி, ``பிரமிளா மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட பிறகும் தொடர்ந்து அதிர்ச்சியிலேயே இருந்தார். அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரையும் அதே மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். கணவரின் இறப்பைத் தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் இறந்துபோனார். கணவர் காலை 10 மணிக்கு இறந்தார். மனைவி அதே நாளில் பிற்பகல் 2 மணிக்கு இறந்துபோனார்" என்று தெரிவித்தார்.

மரணம்
மரணம்

ஒரே நேரத்தில் கணவன் மனைவி இரண்டு பேரும் இறந்திருப்பதால் அவர்களின் இரண்டு மகன்களும் ஆதரவில்லாமல் இருக்கின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த போலீஸார், ``இதில் எந்தவிதச் சந்தேகத்துக்கும் இடமில்லை" என்று கூறினர். கணவன், மனைவி இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் எடுத்துச் சென்று உறவினர்கள் தகனம் செய்தனர். பெற்றோரை ஒரே நேரத்தில் இழந்த இரண்டு மகன்களும் கதறி அழுதது அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது.