Published:Updated:

குடும்ப பிரச்னையில் கைக்குழந்தையை அடித்த தாய்; வைரல் வீடியோவால் போலீஸ் விசாரணை!

Representational Image
Representational Image ( Pixabay )

குடும்பப் பிரச்னையில் தன் 7 மாதக் குழந்தையை அதன் அம்மா கண்மூடித்தனமாக அடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், தன் 6 மாதக் குழந்தையை தாய் கண்மூடித்தனமாக அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸாரை வலியுறுத்தினர். அந்த வீடியோவில் இருப்பது யார் என்பது குறித்து நாக்பூர் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

பச்சிளம் குழந்தை
பச்சிளம் குழந்தை

இதில், நாக்பூரில் உள்ள அம்பஜாரி என்ற இடத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் குழந்தையைக் கண்மூடித்தனமாக அடித்துள்ளார் என்று தெரிய வந்தது. இச்சம்பவம் மே 24-ம் தேதி நடந்துள்ளது. வீட்டில் குழந்தையின் அம்மாவுக்கும், அவர் மாமியாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தை அழுதுகொண்டிருந்தது. இதனால் ஆத்திரத்தில் குழந்தையை அதன் அம்மா கண்மூடித்தனமாக அடித்துள்ளார். வீட்டில் இருந்த மற்றோர் உறவினர், இதைத் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துவிட்டார்.

அவர் அந்த வீடியோவை தனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பி இருக்கிறார். அதை அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்ததால் வீடியோ காட்டுத்தீயாகப் பரவியது. அதன் பிறகே இப்பிரச்னை போலீஸார்வரை சென்றது. போலீஸ் விரைந்து செயல்பட்டுக் குழந்தையையும் அதன் பெற்றோரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

`குழந்தையை அடிக்கக் கூடாது' என்று பெற்றோருக்கு போலீஸார் ஆலோசனை வழங்கி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மாமியாரும் மருமகளும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது வழக்கம் என்று, அவர்கள் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

Child - Representational Image
Child - Representational Image
Photo by Luma Pimentel on Unsplash

குழந்தையின் பாட்டி வீட்டுவேலை செய்து மாதம் ரூ.2,000 சம்பாதிக்கிறார். அதில்தான் அனைவரும் சாப்பிட வேண்டியிருக்கிறது. குழந்தையின் அப்பா டிரம்ப் இசைக்கும் கலைஞராக இருக்கிறார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக வேலை இல்லாமல் இருக்கிறார்.

லாக்டௌனும் வறுமையும், மனஅழுத்தமும் சேர்ந்து பல குடும்பங்களிலும் உறவுச் சிக்கல்கள் வெடித்தபடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு