Published:Updated:

காதல்; நெருக்கம்... அந்தரங்கப் படங்களை வெளியிடப்போவதாக மிரட்டும் பெண் - இளைஞரின் பரபரப்பு புகார்!

காதல் ( சித்திரிப்புப் படம் )

தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டி பணம் பறிக்க திட்டமிடும் பெண் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

காதல்; நெருக்கம்... அந்தரங்கப் படங்களை வெளியிடப்போவதாக மிரட்டும் பெண் - இளைஞரின் பரபரப்பு புகார்!

தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக மிரட்டி பணம் பறிக்க திட்டமிடும் பெண் மீது இளைஞர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

Published:Updated:
காதல் ( சித்திரிப்புப் படம் )

ராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் சதார் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய பெண் நாளடைவில் நட்பாக பேசி பழகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இருவரும் சந்திந்துக்கொள்ள முடிவு செய்து முதன்முறையாக கதுஷ்யாம்ஜியில் சந்தித்திருக்கின்றனர். அந்த சந்திப்பில் சுபாஷின் முழு நம்பிக்கைக்கு உரியவராக அந்தப் பெண் மாறிவிட்டார்.

சில நாள்களில் சுபாஷ் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண்ணும் இது தொடர்பாக என் தந்தையிடம் பேசுங்கள் எனக் கூறி ஒரு நபரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மூவரும் சந்தித்து பேசி திருமணத்துக்கும் சம்மதித்திருக்கின்றனர்.

செல்போன் காதல்
செல்போன் காதல்

இதற்கிடையில், அந்தப் பெண் தனக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் தன்னுடன் தங்கியிருக்கிமாறு ஒரு ஹோட்டலுக்கு சுபாஷை அழைத்திருக்கிறார். ஒன்றாக தங்கியிருந்தபோது சுபாஷை நிர்வாணமாக புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவு செய்திருக்கிறார். அதன் பிறகு சில நாள்களில் சுபாஷிடம் பேசுவதை அந்தப் பெண் தவிர்த்திருக்கிறார்.

இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தையாக அறிமுகமான அந்த நபரிடம் அழைத்து விசாரித்திருக்கிறார் சுபாஷ். அந்த நபர் "என் மகள் திருமணத்துக்கு மறுத்துவிட்டாள். அதனால் அவளை தொல்லை செய்ய வேண்டாம்" எனக் கூறியிருக்கிறார். சுபாஷும் அதற்குப் பிறகு அந்தப் பெண்ணுடன் தொடர்புக்கொள்ளவில்லை.

காவல்துறை
காவல்துறை

இந்த நிலையில், திடீரென சுபாஷின் ஆபாச படங்களை அவருக்கு அனுப்பி, `ரூ.10 லட்சம் தரவேண்டும் இல்லையென்றால் இந்தப் புகைப்படங்களை உன் குடும்பத்தார், நண்பர் என அனைவருக்கும் அனுப்பிவிடுவேன்’ எனத் மிரட்டியிருக்கிறார். மேலும், தன்னுடன் ஒரு பெரிய குழு இயங்குவதால் உன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் கூறியிருக்கிறார். அதன் பிறகு தான் சுபாஷுக்கு நடந்த நாடகம் புரிந்திருக்கிறது. உடனே, சிகார் சதார் காவல் நிலையப் பகுதியில் இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை இது தொடர்பாக விசாரணையை தொடங்கியிருக்கிறது.