Published:Updated:

`என் மகள்கள்தான் இன்ஸ்பிரேஷன்!' - மகள்களுடன் பொதுத்தேர்வு எழுதி வெற்றிபெற்ற அம்மா

தேர்வு

``என் மகள்கள்தான் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். இன்று, இதைப் படிக்க வேண்டும் என்று முன்பே அட்டவணை தயார் செய்து கொடுத்துவிடுவார்கள். வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு படிக்க வேண்டியதைப் படித்து முடித்துவிட்டுத்தான் படுக்கச் செல்வேன்.’’

`என் மகள்கள்தான் இன்ஸ்பிரேஷன்!' - மகள்களுடன் பொதுத்தேர்வு எழுதி வெற்றிபெற்ற அம்மா

``என் மகள்கள்தான் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். இன்று, இதைப் படிக்க வேண்டும் என்று முன்பே அட்டவணை தயார் செய்து கொடுத்துவிடுவார்கள். வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு படிக்க வேண்டியதைப் படித்து முடித்துவிட்டுத்தான் படுக்கச் செல்வேன்.’’

Published:Updated:
தேர்வு

கற்றலுக்கு வயது தடை இல்லை என்பார்கள். அதைத் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 53 வயது பெண் ஷீலா ராணி தாஸ் நிரூபித்துள்ளார். கடந்த வாரம் திரிபுராவில் வெளியான 12-ம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் ஷீலா ராணியின் இரண்டு மகள்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்; அன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஷீலா ராணி தேர்ச்சி பெற்றுள்ளார். இது குறித்து ஷீலா ராணி வழங்கிய பேட்டியில்,

தேர்வு
தேர்வு
PIxabay

``நான் 1994-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினேன். அந்த வருடம் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை. அதன் பின் திருமணம், குழந்தைகள் என்று என் படிப்பை தொடர முடியாமல் போனது. கணவரும் இறந்துவிட்டார். குழந்தைகளுக்காக ஓடவே நேரம் சரியாக இருந்தது. இந்த வருடம் என் மகள்கள் இருவரும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார் செய்து வந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்கள் காலையில் எழுந்து படிப்பது, குறிப்புகள் எடுப்பது இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. மகள்களிடம் சொன்னேன். ஆரம்பத்தில் ஆச்சர்யமாகப் பார்த்தாலும், என்னுடைய கனவுக்கு துணை நின்றனர். நாங்கள் மூவருமாகச் சேர்ந்து படிக்க ஆரம்பித்தோம்.

படிப்பு
படிப்பு

என் மகள்கள்தான் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். இன்று இதைப் படிக்க வேண்டும் என்று முன்பே அட்டவணை தயார் செய்து கொடுத்துவிடுவார்கள். வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு படிக்க வேண்டியதைப் படித்து முடித்துவிட்டுத் தான் படுக்கச் செல்வேன். தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டேன். ஆனால், ரிசல்ட் வரும்வரை ஒரு சிறிய பதற்றம் மனதுக்குள் இருந்தது. நான் தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்று மகள்கள் நம்பிக்கை வார்த்தை கூறினார்கள். அவர்கள் சொல்லியது போலவே தேர்ச்சி பெற்றுவிட்டேன். `இந்த வயதில் இதெல்லாம் தேவையா?' என்று சிலர் விமர்சிக்கிறார்கள். என் நீண்ட நாள் ஆசைக்காக மட்டுமே படித்தேன். என் மகள்கள்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்" என்று கூறியுள்ளார்.