Published:Updated:

மகாராஷ்டிரா: கையில் பச்சிளம் குழந்தை; சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பெண் எம்.எல்.ஏ!

குழந்தையுடன் வந்த பெண் எம்.எல்.ஏ
News
குழந்தையுடன் வந்த பெண் எம்.எல்.ஏ

மகாராஷ்டிராவில் பெண் எம்.எல்.ஏ ஒருவர் இரண்டு மாதமே ஆன தன் பச்சிளம் குழந்தையுடன் சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மகாராஷ்டிரா: கையில் பச்சிளம் குழந்தை; சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பெண் எம்.எல்.ஏ!

மகாராஷ்டிராவில் பெண் எம்.எல்.ஏ ஒருவர் இரண்டு மாதமே ஆன தன் பச்சிளம் குழந்தையுடன் சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

Published:Updated:
குழந்தையுடன் வந்த பெண் எம்.எல்.ஏ
News
குழந்தையுடன் வந்த பெண் எம்.எல்.ஏ

மகாராஷ்டிராவில் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று நாக்பூரில் தொடங்கியது. இக்கூட்டத்தில், கர்நாடகாவுடனான எல்லை பிரச்னை பெரிய அளவில் எதிரொலித்தது. சட்டமன்றத்துக்கு, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரோஜ் பாபுலால் அகிரே என்ற பெண் எம்.எல்.ஏ தனது இரண்டு மாத கைக்குழந்தையுடன் வந்தார். அவரின் கையில் இருந்த குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.

அகிரேவுக்கு கடந்த செப்டம்பர் 30-ம் தேதிதான் குழந்தை பிறந்தது. சட்டமன்றக் கூட்டத்தை தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக, அவர் தன் குழந்தையுடன் அவைக்கு வந்தது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் குழந்தையுடன் அவைக்குள் நுழையும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவியது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் குழந்தையை வாங்கிக் கொஞ்சினர்.

மகாராஷ்டிரா: கையில் பச்சிளம் குழந்தை; சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பெண் எம்.எல்.ஏ!

பெல்காம் எல்லைக்குள் நுழைய தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்று கூறி, சட்டமன்றத்தில் முன்னாள் துணை முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் போராட்டத்தில் ஈடுபட்டார். சரத்பவார் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவரான சகன் புஜ்பால் எழுந்து, கர்நாடகாவில் வாழும் மராத்தியர்களுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, `முதன்முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்து வருகிறார். எனவே, எல்லை பிரச்னையை அரசியலாக்க வேண்டாம். எல்லையோர மக்களுக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அசோக் சவான் இது குறித்து கூறுகையில், `கர்நாடகா முதல்வரின் போலி ட்விட்டர் கணக்குதான் எல்லை பிரச்னைக்குக் காரணம் என்று கூறி மகாராஷ்டிராவை திசை திருப்ப பார்க்கின்றனர்’ என்று தெரிவித்தார்.