Published:Updated:

ரயில் முன் தற்கொலை முயற்சி; இளம்பெண்ணை சாதுர்யமாகக் காப்பாற்றிய காவலர்! - திக்... திக் வீடியோ

ரயில் முன் பாய்ந்து, தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் ( ட்விட்டர் )

மும்பையில் ரயில் முன் பாய்ந்து, தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவலர்கள் உரிய நேரத்தில் காப்பாற்றிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையில், பைகுல்லா ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் ரயில் முன் ஓடியதாகத் தெரிகிறது. அப்போத அந்த வழித்தடத்தில் ரயில் ஒன்று மிக வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது தூரத்தில் பெண் வருவதைப் பார்த்த மோட்டார் மேன் அவசர பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த ஆர்.பி.எஃப் காவலர், அந்தப் பெண்ணை தண்டவாளத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டு உயிரைக் காப்பாற்றினார். அதன்பிறகு அந்தப் பெண்ணை அதிகாரிகள் ஒன்றாம் நம்பர் பிளாட்பாரத்துக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண்ணை காதலித்துவந்த நபர் திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, போலீஸார் அந்தப் பெண்ணின் காதலனை காவல் நிலையம் வரவழைத்து, இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

ரயில் நிலையத்தில் நூலிலையில் ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றியதற்காக ஆர்.பி.எஃப் காவலருக்கும், மோட்டார் மேனுக்கும் பொதுமக்கள், அதிகாரிகள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.