Published:Updated:

முதலில் கடமைதான்! -கொரோனா பணிக்காக திருமணத்தைத் தள்ளி வைத்த பெண் போலீஸ்

ஷாகிதா ப்ரவீன்
ஷாகிதா ப்ரவீன் ( சப் -இன்ஸ்பெக்டர் )

திருமணம் முடிவான நாளன்று பணிக்கு வந்த ஷாகிதா ப்ரவீனை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பணியில் இருப்பதால் பெண் காவல்துறை அதிகாரி தனது திருமணத்தையே தள்ளி வைத்துள்ளார்.

நடந்தே ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள்
நடந்தே ஊர்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக லாக் டவுண் அறிவிக்கப்பட்டு தடை உத்தரவு பின்பற்றப்படுகிறது. இந்தத் தடை உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்களின் பிரச்னைகளை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. அத்தோடு, அவர்கள் தங்குவதற்கான முகாம்களையும் அமைத்து வருகின்றன.

இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள `முனி கி ரெட்டி' காவல் நிலையத்தில், சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் ஷாகிதா ப்ரவீன். இவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பே திருமணம் முடிவாகி இருந்தது. அதன்படி, நேற்றுமுன்தினம் (ஏப்ரல் -5) அவரின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

பெண்  காவலர்
பெண் காவலர்
கோப்பு படம் விகடன்

இந்த நிலையில், ஷாகிதா ப்ரவீன் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பணிக்கு வந்தது மற்ற போலீஸாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் முகாமில் பணி ஒதுக்கப்பட்டிருப்பதால் திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளதாக அவர் கூற சக போலீஸார் பாரட்டுகளைத் தெரிவித்தனர்.

முதலில் கடமை செய்ய வேண்டும் என்று திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளேன்
ஷாகிதா ப்ரவீன்

ஷாகிதா ப்ரவீன் பேசுகையில் ``முதலில் கடமை செய்ய வேண்டும் என்று திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளேன். இந்த நிவாரண உதவிகள் வழங்கும் பணி முடிந்தவுடன் திருமணம் செய்துகொள்வேன். இது தொடர்பாக என் வருங்கால கணவரிடமும் பெற்றோர்களிடமும் எடுத்துக்கூறினேன். அவர்கள் என்னுடைய சூழலைப் புரிந்துகொண்டதையடுத்து திருமணத்தைத் தள்ளி வைக்க சம்மதித்தனர்" என்றார்.

ஷாதிகா ப்ரவீனின் கடமையுணர்வை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அத்தோடு அவருக்குச் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு