Published:Updated:

பெண் தொழிலாளர் வருமானம் வெகுவாகக் குறைந்தது... இந்தியாவின் நிலைக்கு என்ன காரணம்?

பெண் தொழிலாளர்கள்
News
பெண் தொழிலாளர்கள்

இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் வருமானம் மிகவும் குறைந்திருப்பதாக ‘சமத்துவமின்மை அறிக்கை’ தெரிவித்துள்ளது. இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் வருமானம் குறைந்திருப்பதற்கு என்ன காரணம்?

`உலக சமத்துவமின்மை அறிக்கை’ கடந்த வாரம் வெளியிடப்பட்டது. 1991-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டுவரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, 180 நாடுகளை உள்ளடக்கியது. `உலக சமத்துவமின்மை ஆய்வக’த்தின் இணை இயக்குநரான லூகாஸ் சான்சல் தலைமையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.

பிரெஞ்ச் பொருளாதார வல்லுநர் தாமஸ் பிக்கெட்டி உட்பட பல வல்லுநர்களின் ஒருங்கிணைப்பில் இந்த அறிக்கை உருவாகியிருக்கிறது. `ஏழைகள் நிறைந்த, சமத்துவமின்மை அதிகம் நிலவக்கூடிய, அதேநேரத்தில் வசதிமிக்கவர்களும் வாழக்கூடிய நாடாக இந்தியா விளங்குகிறது’ என்று லூகாஸ் சான்சல் கூறியிருக்கிறார்.

அபிஜித் பானர்ஜி
அபிஜித் பானர்ஜி

இந்தியா குறித்து அதிர்ச்சிக்குரிய பல விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கும் மேலான (21.7 சதவிகிதம்) வருமானத்தை மொத்த மக்கள்தொகையில் மேல் மட்டத்திலிருக்கும் ஒரு சதவிகிதம் பேர் பெற்றிருக்கிறார்கள். கீழ்மட்டத்தில் இருக்கும் 50 சதவிகிதம் பேர் வெறும் 13.1 சதவிகித வருமானத்தையே பெற்றிருக்கிறார்கள் என்று உலக சமத்துவமின்மை அறிக்கை கூறுகிறது. அதேபோல, மேல் மட்டத்தில் இருக்கும் 10 சதவிகிதம் பேர் நாட்டின் மொத்த வருமானத்தில் 57 சதவிகிதத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த அறிக்கைக்கு முன்னுரை எழுதிய நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ ஆகியோர், உலகில் சமத்துவமின்மை அதிகம் இருக்கக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இந்த அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் பல புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில், பெண் தொழிலாளர்களின் வருமானம் வெகுவாகக் குறைந்திருப்பது பற்றிய புள்ளிவிவரம் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. `உலக சராசரியைக் காட்டிலும், இந்தியாவில் பெண்களின் வருமானம் குறைவாக இருக்கிறது’ என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உழைக்கும் பெண்கள்
உழைக்கும் பெண்கள்

இந்த அறிக்கையில், பெண்களின் வருவாய் பங்கு பெரும்பாலும் 10 சதவிகிதம் முதல் 45 சதவிகிதம் வரை ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது. இந்த விகிதமானது, உலகம் முழுவதும் 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. இந்தியாவில் தொழிலாளர் வருமானத்தில் ஆண்களுக்கு 82 சதவிகிதம் கிடைக்கும்போது, பெண்களுக்கு அது 18 சதவிகிதம் என்ற அளவிலேயே இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆசிய நாடுகளின் சராசரியைக் காட்டிலும், இந்தியப் பெண்களின் வருமானம் குறைவு என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெண் தொழிலாளர்களின் வருமானம், அண்டை நாடுகளான சீனாவில் 33.4 சதவிகிதம், இலங்கையில் 23.3 சதவிகிதம், நேபாளத்தில் 23.2 சதவிகிதம் என இருக்கிறது. இது, இந்தியாவைவிட அதிகம். அண்டை நாடுகளான பூடான் 17.5 சதவிகிதம், வங்காளம் 16.9 சதவிகிதம், பாகிஸ்தான் 7.4 சதவிகிதம் என இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, 2005-ம் ஆண்டில் 26 சதவிகிதமாக இருந்த இந்த விகிதம், 2019-ம் ஆண்டில் 20.3-ஆகக் குறைந்தது. 2020-ம் ஆண்டு ஜூலை - செப்டம்பர் வரையிலான பெருந்தொற்று காலகட்டத்தில் இந்த விகிதம் 16.1 சதவிகிதமாக வீழ்ந்தது. உலக அளவில் பெண்களுக்கான வருவாய் விகிதம் (45 சதவிகிதம்) அதிகம்கொண்ட நாடாக மோல்டாவா விளங்குகிறது. மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் சராசரியாக 15 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. ஏமன் நாடு மிகக் குறைந்த பெண்களுக்கான வருவாய் விகிதம் (1 சதவிகிதம்) கொண்ட நாடாக உள்ளது.

பெண் தொழிலாளர்கள்
பெண் தொழிலாளர்கள்

வேலை செய்வதில் பெண்களின் பங்கு பெரிய அளவில் அதிகரித்திருந்தாலும், பெண்களின் பணிக்கான வருவாய் பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் வருவாய் குறைந்திருப்பதற்கான காரணங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், களச் செயற்பாட்டாளருமான பா.ஹேமாவதியிடம் பேசினோம்.

``இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் வருமானம் குறைவாக இருப்பதற்கு, அடிப்படையில் நம் தேசத்தில் பாலினப் பாகுபாடு அதிகமாக இருப்பது ஒரு முக்கியமான காரணம். சம வேலைவாய்ப்பு என்பதும், சம ஊதியம் என்பதும் இங்கு கிடையாது. பெண்கள் கடுமையாக வேலை செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய வருவாய் கிடைப்பதில்லை.

பா.ஹேமாவதி
பா.ஹேமாவதி

விவசாயம், கட்டுமானம், வீட்டு வேலை போன்ற அமைப்புசாரா வேலைகளில் பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். குடும்பத்தில் சமைப்பது, குழந்தைகளை கவனிப்பது உட்பட குடும்பத்துக்குத் தேவையான வேலைகளைச் செய்துவிட்டு, சம்பாதிப்பதற்காக இது போன்ற கடுமையான வேலைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், சம வேலைக்கு சம ஊதியம் என்பது எங்கும் வழங்கப்படுவதில்லை. இது மிகப்பெரிய அநீதி, அப்பட்டமான உழைப்புச் சுரண்டல். எனவேதான், பெண் தொழிலாளர்களின் வருமானம் இந்தியாவில் குறைவாகவே இருந்துவருகிறது.

சமீபத்திய பிரச்னை கொரோனா பெருந்தொற்று. இதன் காரணமாக, கட்டுமானம் உட்பட பெரும்பாலான தொழில்கள் முடங்கியதால், பல கோடித் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அதில், பெண் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். முன்பைக்காட்டிலும், பெண் தொழிலாளர்களின் வருமானம் குறைந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

இப்படியான சூழலில், உலக சமத்துவமின்மை அறிக்கை வெளிவந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஏனென்றால், பெண்கள் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்னையில் ஆட்சியாளர்களின் கவனம் திரும்புவதற்கு இது போன்ற அறிக்கைகள் உதவும்.

பட்டாசுத் தயாரிப்பில் பெண் தொழிலாளர்
பட்டாசுத் தயாரிப்பில் பெண் தொழிலாளர்

இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, பெண் தொழிலாளர்களின் பிரச்னைகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பிரச்னை காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்றார்.