Published:Updated:

இருக்கையில் அமருவதில் தகராறு; பெண்கள் சண்டையால் போர்க்களமான ரயில்... 3 பேர் காயம்! - ஒருவர் கைது

தகராறு

மும்பை புறநகர் ரயிலில் சீட்டில் அமருவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் பயணிகள் மோதலில் ஈடுபட்டனர். இதைத் தடுக்க வந்த பெண் காவலர் காயமடைந்தார்.

இருக்கையில் அமருவதில் தகராறு; பெண்கள் சண்டையால் போர்க்களமான ரயில்... 3 பேர் காயம்! - ஒருவர் கைது

மும்பை புறநகர் ரயிலில் சீட்டில் அமருவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் பயணிகள் மோதலில் ஈடுபட்டனர். இதைத் தடுக்க வந்த பெண் காவலர் காயமடைந்தார்.

Published:Updated:
தகராறு

மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். காலை, மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் ஏறுவது என்பது குதிரைக்கொம்பாகத்தான் இருக்கும். ஆண் பயணிகளுக்கே இந்த நிலை என்றால் பெண் பயணிகளின் நிலையைக் கேட்கவே வேண்டாம். அவர்கள் ஒவ்வொரு நாளும் ரயிலில் ஏறி வேலைக்குச் சென்றுவருவதை ஒரு போராட்டமாகக் கருதுகின்றனர். முட்டி மோதி ரயிலில் ஏறிவிட்டாலும், உள்ளே சீட் பிடிப்பதில் தகராறு ஏற்படுகிறது. அடிக்கடி மும்பையில் புறநகர் ரயில்களில் இருக்கையில் அமருவது தொடர்பாக பெண்கள் சண்டையிட்டுக்கொள்வதுண்டு. பெரும்பாலும் இந்தச் சண்டை அடுத்த ரயில் நிலையம் வருவதற்குள் முடிந்துவிடும். சில நேரங்களில் இந்தச் சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்வதுண்டு. ரயில்வே போலீஸார் தலையிட்டு தகராறைத் தீர்த்து வைப்பார்கள். அது போன்ற ஒரு சம்பவம்தான் இப்போது மீண்டும் நடந்திருக்கிறது.

தானேவிலிருந்து பன்வெல் செல்லும் புறநகர் ரயில் துர்பே ரயில் நிலையத்துக்கு வந்தபோது இருக்கையில் அமருவது தொடர்பாக மூன்று பெண் பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அது அடிதடியாக மாறியது. அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்.

தகராறு
தகராறு

சிறிது நேரத்தில் இந்தச் சண்டையில் மற்ற பெண்களும் சேர்ந்துகொண்டனர். இந்தச் சண்டையால் ரயில் பெட்டியே போர்க்களம் போன்று மாறியது. சண்டையில் ஈடுபட்ட பெண்கள் ஒருவரை ஒருவர் முடியைப் பிடித்து இழுத்து தாக்கிக்கொண்டனர். சில பயணிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பான பகுதியை நோக்கி ஓடினர். ரயில் நெருல் ரயில் நிலையம் வந்தபோது சிலர் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனே அந்த ரயில் பெட்டிக்குள் பெண் காவலர் சாரதா உள்ளே நுழைந்தார். உடனே சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். ஆனால் மீண்டும் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களின் சண்டையைப் பெண் காவலர் தீர்த்துவைக்க முயன்றார். ஆனால் பெண் காவலரையும் பெண் பயணிகள் விட்டுவைக்கவில்லை. அவரையும் அடித்து உதைத்தனர். இந்த மோசமான தகராறில் பெண் காவலர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் ரயிலிலிருந்து இறங்கும்போது தலையிலிருந்து ரத்தம் கொட்டியது. காயமடைந்த பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து வசாய் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சாம்பாஜி, ``குல்நாத் கான் (50) என்ற பெண் தன் மகள், பேத்தி ஆகியோருடன் ரயிலில் தானேவிலிருந்து பயணம் செய்திருக்கிறார். ரயில் கோபர்கைர்னே வந்தபோது சினேகா என்ற பெண் ஏறினார். ரயில் துர்பே வந்தபோது ஓர் இருக்கை காலியானது. உடனே அந்த இருக்கையில் சினேகா அமர்ந்தார். அந்த இருக்கையில் குழந்தையை அமரவிடாமல் சினேகா அமர்ந்துகொண்டதாகக் கூறி சினேகாவுடன் தாயும் மகளும் தகராறு செய்தனர். தாயும் மகளும் சேர்ந்து சினேகாவின் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு அடித்து உதைத்துள்ளனர். மற்ற பயணிகள் அதைத் தடுக்க முயன்றதில் முடியாமல் போனது. இந்தத் தகராறு தொடர்பாக தாய், மகள்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. ஒரு பெண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்" என்று தெரிவித்தார்.