Published:Updated:

`எங்களுக்கு அமைதி வேண்டும்; அகதிகள் இல்லை' - கலாசார உடையில் திரண்ட ஆயிரக்கணக்கான அஸ்ஸாம் பெண்கள்

அஸ்ஸாம் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதற்காகவும், குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று அங்கு ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம் ( Twitter/@RatnadipC )

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த பத்து நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. சில போராட்டங்களில் வன்முறையோடு உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்
Twitter/@RatnadipC

இதற்கிடையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு அதிக எதிர்ப்பு தெரிவிக்கும் அஸ்ஸாம் மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சர்வானந்த் சோனாவால், அமைச்சர்களுடன் இணைந்து பாத யாத்திரையைக் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மக்கள் அமைதிக் காக்க வேண்டும் அப்போதுதான் மாநிலத்தை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டு செல்ல முடியும். குடியுரிமை சட்டத்தால் மாநிலத்தின் கலாசாரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். மாநிலத்தின் அமைதிக்காகவும் இடையூறு இல்லா வளர்ச்சிக்காகவும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்?’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்

இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தியும் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அஸ்ஸாம் மாநில பெண்கள் தங்கள் பாரம்பரிய கலாசார உடையணிந்தபடி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ``முகலாயர்களை எதிர்த்துப் போரிட்ட முலா கபாரு (Mula Gabharu), கனக்லடா (Kanaklata) மற்றும் பிர் லாசிட் போர்புகோனின் ( Bir Lachit Borphukon) வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். அஸ்ஸாம் மாநிலத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்த வரலாறு உள்ளது. அதேபோல் தற்போது கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” எனப் போராட்டத்தில் கலந்துகொண்ட கௌஹாத்தி பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்
Twitter/@RatnadipC

தொடர்ந்து பேசிய மற்றொரு பெண், ``இந்தச் சட்டம் அரசின் நலன்களுக்கும் மாநிலத்தின் மொழி, கலாசாரம், மற்றும் இன நல்லிணக்கத்துக்குத் தீங்கு விளைக்கும் வகையில் உள்ளது. இதை எதிர்த்துப் பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம் ஆனால், ஒருமுறை கூட அரசு எங்கள் பேச்சைக் கேட்கவில்லை . எங்களுக்கு அமைதி மட்டுமே தேவை. வங்கதேசத்தின் அகதிகள் இல்லை. எங்கள் தாய்மார்கள் சொல்வதை அரசு ஏற்றுக்கொள்ளும்போதுதான் மாநிலத்தில் அமைதி திரும்பும். குடியுரிமை சட்டத்தை நீக்குங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.