Published:Updated:

"நாங்கள் பிச்சை கேட்கவில்லை!"- கொந்தளிக்கும் ராணுவக் குடும்பங்கள்... அலட்சியம் காட்டுகிறதா அரசு?!

மோடி
மோடி

"நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்கள் அப்பாவையும், அம்மாவையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். ஆனால், இந்தத் தொகை அவர்களின் உரிமை. அவர்களின் தியாகத்திற்கான அடையாளம். அதனால் அது கிடைக்க வேண்டும்"

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் அரசு சார்பாக பல இந்தியர்களும் போரிட்டார்கள். கிட்டத்தட்ட 87,000 இந்தியர்கள் அந்தப் போரில் பல விதங்களில் பங்களித்தார்கள். இதில் உயிரிழந்தவர்கள் ஏராளம். உயிர் பிழைத்தவர்களுக்கு பிரிட்டிஷ் அரசு எந்த உதவியும் அப்போது செய்யவில்லை. 1964-ம் ஆண்டு மார்ஷல் கரியப்பா மற்றும் ஜெனரல் திம்மைய்யா ஆகியோர் போரில் பங்கேற்ற வீரர்களுக்கும், போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கும் உதவும் பொருட்டு Indian Ex-Services League (IESL) என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
மார்ஷல் கரியப்பா
மார்ஷல் கரியப்பா

இதன் மூலம், லண்டனைச் சேர்ந்த Royal Commonwealth Ex-Services League-ஐ அணுகி வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் உதவித்தொகை கொடுக்க முடிவானது. ஆண்டுக்கு இரண்டு முறை, மாதம் 200 ரூபாய் எனத் தருவதாகத் திட்டமிடப்பட்டு அது தொடர்ந்தது. 1972-ம் ஆண்டு இந்தத் தொகை மாதம் 4000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதுவே இப்போதுவரை தொடர்கிறது.

இந்தியாவில் மொத்தம் 4000 குடும்பங்களுக்கு இந்த ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் வீரரோ அல்லது அவர் மனைவியோ உயிருடன் இருப்பதற்கான சான்று அளிக்கப்பட்டால் இந்தத் தொகை தரப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக Royal Commonwealth Ex-Services League-ல் இருந்து பணம் பெறுவது சிக்கலானதால் உதவித்தொகை தரப்படுவதில்லை. மத்திய அரசின் புதிய கெடுபிடிகளால் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவதில் சிக்கல்கள் எழுந்தன. 2019 ஜனவரி மாதத்திற்குப் பிறகு இந்த உதவித்தொகை முழுமையாக தடைபட்டு நிற்கிறது.

இந்திய அரசு சொல்லாமல் எங்களால் பணம் அனுப்ப முடியாதென Royal Commonwealth Ex-Services League அமைப்பு சொல்கிறது. நாட்டின் பாதுகாப்பைக் காரணமாகச் சொல்லி மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து பணம் பெற முடியாது என்கிறது. அப்படி பெற வேண்டுமென்றால் ‘FCRA’ பிரிவின் கீழ் பதிவு செய்ய வேண்டும். ஆனால், IESL அமைப்பு இதற்குத் தயாராக இருக்கிறது. அரசு கேட்கும் எந்த டாகுமென்ட்டையும் தரத் தயாராக இருப்பதாக IESL சொல்கிறது. ஆனால், இந்திய அரசிடம் எவ்வளவு கேட்டும் மேலதிகமாக எந்தத் தகவல்களும் தரப்படவில்லை.

உதவித்தொகை
உதவித்தொகை

இத்தனை ஆண்டுகளாக உதவித்தொகை உயர்த்தப்படாமல் இருக்கிறது. இப்போது அதுவும் கிடைக்கவில்லை என்பதால் நாடு முழுவதும் 4000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. "நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்கள் அப்பாவையும், அம்மாவையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம். ஆனால், இந்தத் தொகை அவர்களின் உரிமை. அவர்களின் தியாகத்திற்கான அடையாளம். அதனால் அது கிடைக்க வேண்டும்" என்கிறார்கள் பாதிக்கப்ப்பட்டோரின் குடும்பத்தினர்.

அடுத்த கட்டுரைக்கு