Published:Updated:

மக்கள்தொகை பெருக்கம் மலப்புரம் முதலிடம்... முதல் 10 இடங்களில் கேரளத்தின் மூன்று நகரங்கள்!

மக்கள் தொகைப் பெருக்கத்தில், உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் திருப்பூருக்கு 30-வது இடம் கிடைத்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலப்புரம் முதல் இடத்தில் உள்ளது.

மலப்புரம் நகரம்
மலப்புரம் நகரம்

உலகில் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் திருப்பூருக்கு 30-வது இடம் கிடைத்துள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலப்புரம் முதல் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், முதல் 10 இடங்களில் கேரளத்தின் மூன்று நகரங்கள் இடம்பிடித்துள்ளன. கோழிக்கோடு 4-வது இடத்திலும் கொல்லம் 10-வது இடத்திலும் உள்ளன. வியட்நாமில் கேன் தோ நகரம் இரண்டாவது இடத்திலும் சீனாவின் சுக்லோன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நைஜீரியானவின் அபுஜா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனாவின் சுஸ்குவா 6-வது இடத்தையும் அமீரகத்தின் ஷார்ஜா 7-வது இடத்தையும் சீனாவின் புட்லான் 8- வது இடத்தையும் ஓமன் தலைநகர் மஸ்கட் 9-வது இடத்தையும் பெற்றுள்ளன.

மலப்புரம் நகரம்
மலப்புரம் நகரம்

ஐ.நா. சபையின் The Economist magazine இதழ் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது. முதலிடத்தைப் பிடித்துள்ள மலப்புரத்தில் 2015 முதல் 2020-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் மக்கள் தொகை 44 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கோழிக்கோடு 34.5 சதவிகித வளர்ச்சி விகிதத்தையும் கொல்லம் 31.1 வளர்ச்சி விகிதத்தையும் எட்டியுள்ளன. இந்தப் பட்டியலில், கேரளாவின் பண்பாட்டுத் தலைநகராகக் கருதப்படும் திருச்சூருக்கு 13-வது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்திலிருந்து ஒரே ஒரு நகரம்தான் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பின்னலாடை நகரான திருப்பூர்தான் அது. பல மாநிலத்தவரும் இந்த நகரில் வந்து குடியேறுவதால், திருப்பூரில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துள்ளது.

பாடம் கற்றுத் தந்த உள்ளாட்சித் தேர்தல்... பாதையை மாற்றுமா நாம் தமிழர் கட்சி?

முதலிடத்தில் உள்ள மலப்புர நகரம் கேரள மாநிலத்தின் 4-வது மிகப் பெரிய நகரம். சுமார் 17 லட்சம் மக்கள் தொகை கொண்டது. மக்கள் தொகையில் பெரும்பாலோனோர் இஸ்லாமியர்கள். இந்த நகரத்தில் வளைகுடா நாடுகளில் வேலை செய்வோரும் அதிகம். இதனால், செல்வச்செழிப்பில் இந்த நகரம் திளைக்கிறது.

திருப்பூர்
திருப்பூர்

கால்பந்து மலப்புரம் நகரத்தின் முக்கிய விளையாட்டு. ஏராளமான கால்பந்து வீரர்கள் இந்த நகரத்தில் இருந்து உருவாகியிருக்கின்றனர். கோழிக்கோடு கேரள மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரம். இங்கும், இஸ்லாமிய மக்கள் அதிகம்.

- கௌசிகா