Published:Updated:

டெஸ்ட் ரிசல்ட் `நெகட்டிவ்'.. முகாமில் இருந்து வெளியேறும் 406 இந்தியர்கள்! #coronavirus

கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா குறித்த பரிசோதனைகள் செய்யப்பட்டு, கொரோனாவால் அவர்கள் பாதிக்கப்படவில்லை என முடிவறிக்கைகள் வரும் பட்சத்தில் இவர்கள் சில தினங்களில் விடுவிக்கப்படுவார்கள் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா வைரஸுக்கு எதிராக சீன மக்கள் கடுமையாகப் போராடி வரும் நிலையில், உலக நாடுகள் பலவற்றையும் இந்த வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸிடமிருந்து தப்பிக்க பல்வேறு நடவடிக்கைகளை சீனா உட்பட பல நாடுகள் எடுத்தாலும், அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. நினைத்ததைவிட கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே உள்ளது எனலாம்.

கொரோனா அலர்ட் - இந்தியா
கொரோனா அலர்ட் - இந்தியா

சீனாவில் கொரோனா வைரஸின் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு வுகான் உட்பட பல நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. உணவு, போக்குவரத்து உட்பட பல அன்றாடத் தேவைகளுக்கும் மக்கள் கஷ்டப்படத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து சீனாவில் வாழும் பிற நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்கு `விரைவில் எங்களை நீங்கள் மீட்க வேண்டும்’ என அனுபவிக்கும் கஷ்டங்களை முன்வைத்து கோரிக்கைகளை விடுத்தனர். இதன் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் சீனாவில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களைப் பத்திரமாக மீட்டு வர ஏற்பாடுகளை செய்தனர்.

`பேய் நகரத்தைப் போல இருந்தது!’ -வுகானிலிருந்து இந்தியர்களை மீட்ட விமானிகளின் திகில் அனுபவங்கள்

இந்தியா போயிங் 747 என்ற விமானம் மூலம் வுகானில் தங்கியிருந்த சுமார் 650 இந்தியர்களை மீட்டு வந்தனர். இவர்களில், மாலத்தீவைச் சேர்ந்த 7 பேர் உட்பட சுமார் 406 பேரை இந்தோ திபெத்திய எல்லை காவல்துறையினருக்குச் சொந்தமான முகாம் ஒன்றில் தனிமைப்படுத்தி தங்க வைத்தனர். மீதமுள்ளவர்களை ஹரியானாவில் ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தில் தங்க வைத்தனர். கொரோனா குறித்த பரிசோதனைகள் செய்யப்பட்டு, கொரோனாவால் அவர்கள் பாதிக்கப்படவில்லை என முடிவறிக்கைகள் வரும் பட்சத்தில் இவர்கள் சில தினங்களில் விடுவிக்கப்படுவார்கள் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா
கொரோனா

இந்த நிலையில், வுகானிலிருந்து வந்தவர்களின் மருத்துவ அறிக்கைகளில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், கொரோனா வைரஸால் அவர்கள் பாதிக்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்தோ திபெத்திய எல்லை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்கள் சுகாதார அமைச்சகத்தால் வழங்கப்படுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் திங்கள்கிழமை முதல் விடுவிக்கப்படுவார்கள் என இந்தோ திபெத்திய எல்லைக் காவல்துறையினரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“இருமல் சத்தம் நரகத்தின் கதவுகளைத் தட்டுவதாக உணர்ந்தேன்!” - கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சீன இளைஞர்
அடுத்த கட்டுரைக்கு