Published:Updated:

`பேய் நகரத்தைப் போல இருந்தது!’ -வுகானிலிருந்து இந்தியர்களை மீட்ட விமானிகளின் திகில் அனுபவங்கள்

விமானிகள்
விமானிகள் ( The hindu )

``வுகானுக்கு மீட்புப்பணிக்காக செல்வதை தனது குடும்பத்தினரிடம் கூற வேண்டாம்” என்று சக அதிகாரிகளிடம் கூறியதாகவும் விமானி ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸூக்கு எதிராக சீன மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், உலக நாடுகள் பலவற்றையும் இந்த வைரஸ் அச்சுறுத்த தொடங்கியது. இந்த வைரஸிடமிருந்து தப்பிக்க பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸின் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு வுகான் உட்பட பல நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. உணவு, போக்குவரத்து உட்பட பல அன்றாடத் தேவைகளுக்கும் மக்கள் கஷ்டப்படத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சீனாவில் வாழும் பிற நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்கு `விரைவில் எங்களை நீங்கள் மீட்க வேண்டும்’ என அனுபவிக்கும் கஷ்டங்களை முன்வைத்து கோரிக்கைகளை விடுத்தனர். இதன் அடிப்படையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் சீனாவில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வர ஏற்பாடுகளை செய்தனர்.

சீனா செல்லும் ஏர் இந்தியா விமானம்
சீனா செல்லும் ஏர் இந்தியா விமானம்

பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு பிறகு இந்தியாவும் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த ஜனவரி 31-ம் தேதி ஏர் இந்தியா போயிங் 747 என்ற விமானம் மூலம் சுமார் 650 இந்தியர்களை மீட்டு வந்தனர். இந்த மீட்புப்பணியில் விமானிகள், மருத்துவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட 34 பேர் அடங்கிய குழு செயல்பட்டது. குழுவின் தலைவராக இருந்த கேப்டன் அமிதாப் சிங் உள்ளிட்ட கேப்டன்கள் கமல் மோகன், சஞ்சய், ரீஷா, பூபேஷ் நரேன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தங்களது அனுபவங்களைப் பதிவு செய்துள்ளனர்.

`அண்டை நாட்டவருக்கு உதவ இந்தியா தயாராக இருந்தது!’ - கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஜெய்சங்கர்

மீட்புப்பணி குறித்து அவர்கள் பேசுகையில், ``நான்கு மணி நேரம் நீண்ட பயணத்திற்கு பின் வுகானைச் சென்றடைந்தோம். ஆரம்பத்தில், பெரிய அளவில் வேறுபாடுகள் எங்களுக்கு தெரியவில்லை. எப்போதும் போலவே இருந்தது. ஆனால், வுகான் நகரில் இறங்கத் தொடங்கியதும் பேரமைதி நிலவியது. விமான நிலையங்களிலிருந்த விமானங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. வீதிகள் காலியாக இருந்தன. திரைப்படங்களில் வரும் பேரழிவுற்ற நகரங்களின் காட்சி போல இருந்தது. பேய் நகரத்தைப் போலவே இருந்தது” என்று நினைவிலிருந்து மீட்டெடுத்து கூறினர்.

கொரோனா வைரஸ்  தடுப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு

தொடர்ந்து பேசிய விமானிகள், ``சுமார், எட்டு மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தோம். அனைவரும் வருவதற்கு சிறிது நேரமாகியது. நாங்கள் இந்தியாவிலிருந்து புறப்பட்ட பிறகே தங்கள் தங்குமிடங்களில் இருந்து வெளியேற அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனை எல்லாம் முடிந்த பின்னர் அங்கிருந்து கிளம்பினோம். பிப்ரவரி 1-ம் தேதி காலை 7:30 மணி அளவில் இந்தியாவிற்கு வந்தோம். இந்த மீட்புப்பணி மிகவும் சவாலானதாக இருந்தது” என்று தெரிவித்தனர்.

``வுகானுக்கு மீட்புப்பணிக்காக செல்வதை தனது குடும்பத்தினரிடம் கூற வேண்டாம்” என்று சக அதிகாரிகளிடம் கூறியதாகவும் விமானி ஒருவர் தெரிவித்தார். திறம்பட செயலாற்றிய இந்த குழுவினரை நெட்டிசன்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

News Credits : The Hindu

`முதலில் அலர்ட் செய்த ஹீரோ; கண்டித்த போலீஸ்!’ - கொரோனா எச்சரிக்கை விடுத்த மருத்துவர் மரணம்
பின் செல்ல