Published:Updated:

என்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க! அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி

தெ.சு.கவுதமன்
என்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க! அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி
என்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க! அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,578 கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்‌ஷியை விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் சிபிஐ இறங்கியது. ஆனால், இந்தியக் குடியுரிமையைத் தந்துவிட்டு, ஆண்டிகுவா அரசின் குடியுரிமையைப் பெற்றுள்ள அவரை அங்கிருந்து அழைத்துவருவது அவ்வளவு எளிதானதாக இல்லை. 

என்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க! அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி

இந்நிலையில், தொடர்ச்சியாகக் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அவரை இந்தியாவுக்கு அழைத்துவருவதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. மெகுல் சோக்‌ஷியின் உடல்நிலை சரியில்லையென்றும், அவரால் ஆண்டிகுவாவிலிருந்து வெவ்வேறு விமானங்கள் மாறி 41 மணி நேரம் நீண்டதூரப் பயணம் செய்ய இயலாதென்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மெகுல் சோக்‌ஷி சார்பாக தெரிவிக்கப்பட்டது. எனவே இந்தியா சார்பாக ஒரே விமானத்தில் அவரை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். 

இன்னொரு பக்கம் சிபிஐ அமைப்பிற்கு தெரிவித்த கருத்தில், விசாரணைக்கு ஒத்துழைப்பு தர ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் என்னால் இந்தியாவிற்கு வர இயலாது. சிபிஐ அதிகாரிகள் வேண்டுமானால் ஆண்டிகுவா நாட்டிற்கு வந்து என்னிடம் விசாரணை நடத்தலாம் என்று மெகுல் சோக்‌ஷி கூறியுள்ளார். சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற வாக்கியமே இவர்களைப் போன்றவர்களின் முன் கேள்விக்குறியாகி விடுகிறது!