Published:Updated:

பில்லியனரிலிருந்து மில்லியனராகச் சரிவடைந்த அனில் அம்பானி!

தெ.சு.கவுதமன்
பில்லியனரிலிருந்து மில்லியனராகச் சரிவடைந்த அனில் அம்பானி!
பில்லியனரிலிருந்து மில்லியனராகச் சரிவடைந்த அனில் அம்பானி!

ரிலையன்ஸ் குழும நிறுவனரான திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு, முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் இணைந்து நிறுவனத்தைக் கவனித்துவந்தனர். 2005-ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்துகள் பிரிக்கப்பட்டபின், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனமான ஆர்.ஐ.எல்  மற்றும் ஐ.பி.சி.எல் ஆகியவற்றை முகேஷ் அம்பானியும், ரிலையன்ஸ் இன்ஃபோ.காம், ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனங்களை அனில் அம்பானியும் பிரித்து எடுத்துக்கொண்டனர். 

பில்லியனரிலிருந்து மில்லியனராகச் சரிவடைந்த அனில் அம்பானி!

அனில் அம்பானி, 2006-ம் ஆண்டில் 14.8 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தார். முகேஷ் அம்பானியைவிட அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 550 கோடி ரூபாய் அதிகமாக இருந்தது. 2008-ம் ஆண்டில் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலர்களாக உயர்ந்ததோடு, உலகின் ஆறாவது பணக்காரராகவும் திகழ்ந்தார். 

உச்சத்திலிருந்த அனில் அம்பானிக்கு அதற்குப் பிறகு இறங்குமுகம் தான். சரியான திட்டமிடல், தொலைநோக்குப்பார்வை இல்லாததால் அனில் அம்பானியின் தொழில் நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கத் தொடங்கின. புதிய தொழில் முயற்சிகளும் பின்னடைவைச் சந்தித்தன. அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெருநஷ்டத்தைச் சந்தித்து சொத்துக்களை விற்கும் நிலைக்கு வந்தது. அதற்காக அவரது சகோதரர் முகேஷ் அம்பானியின் உதவியை நாடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.

பில்லியனரிலிருந்து மில்லியனராகச் சரிவடைந்த அனில் அம்பானி!

உலக பில்லினர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த அனில் அம்பானி தற்போது அந்த பட்டியலிலிருந்து கீழிறங்கியுள்ளார். அவரது சொத்து மதிப்பு, 42 பில்லியன் டாலர்களிலிருந்து சரிவடைந்து 523 மில்லியன் டாலர்களாக மாறியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,651 கோடியாக உள்ளது. எனவே பில்லியனர்கள் பட்டியலிலிருந்து அனில் அம்பானி வெளியேறிவிட்டார். இருந்தும் தற்போது அவர்வசம் வந்துள்ள ரஃபேல் விமானத்தயாரிப்பு உள்ளிட்ட தொழில் முயற்சிகளில் நல்லவிதமாகச் செயல்பட்டால் மீண்டும் முன்னணிக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது. மீண்டு வருவாரா என்பதற்கு காலமே பதில் சொல்லும்!