Published:Updated:

``இன்னும் 3 நாள்களே இருக்கின்றன; யோசனைகளை அனுப்புங்கள்!"- நிர்மலா சீதாராமன்

செ.கார்த்திகேயன்
``இன்னும் 3 நாள்களே இருக்கின்றன; யோசனைகளை அனுப்புங்கள்!"- நிர்மலா சீதாராமன்
``இன்னும் 3 நாள்களே இருக்கின்றன; யோசனைகளை அனுப்புங்கள்!"- நிர்மலா சீதாராமன்
``இன்னும் 3 நாள்களே இருக்கின்றன; யோசனைகளை அனுப்புங்கள்!"- நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன், முதல் முறையாக வருகிற ஜுலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக மக்களிடம் ஆலோசனைகளைக் கேட்பதைக் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு வழக்கமாகச் செய்துவருகிறது. அந்த அடிப்படையில், சில தினங்களுக்கு முன்பாக, மத்திய பட்ஜெட்டுக்கான பரிந்துரைகளை மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதில், ``குடிமக்களின் ஆலோசனைகள் உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டின் நடைமுறைகளைத் தொடர உங்கள் மதிப்புமிக்க யோசனைகளை நாங்கள் நாடுகிறோம். இந்த ஜனநாயகப் பயிற்சியின் ஒரு பகுதியாக அனைத்துத் தரப்பு குடிமக்களிடமிருந்தும் கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இதன் மூலம், மத்திய பட்ஜெட் 2019-20-ல் குடிமக்களாகிய நீங்களும் பங்கேற்கலாம்" எனத் தெரிவித்திருந்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல தரப்பினர் மத்திய நிதி அமைச்சகத்துக்கு ஐடியாக்களை அனுப்பியிருக்கிறார்கள். அதில் பல ஆலோசனைகள் புதுமையாக இருக்கின்றன. அனைத்தையும் படித்துக்கொண்டிருக்கிறேன் என நிதியமைச்சர், தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 

அந்த ட்விட்டில், ``சமூகத்தின் பல்வேறு பிரிவு மக்களிடமிருந்தும் கருத்துகளையும் ஆலோசனைகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு சிந்தனைக்கும் புதுமையானதாக, இந்தியப் பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்வதாக இருக்கின்றன. அறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களால், பல்வேறு ஊடகங்கள் - மீடியா மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட யோசனைக்கும், கருத்துக்கும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன். அந்தப் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பிட் யோசனைகளையும் நான் மதிக்கிறேன். தொடர்ந்து யோசனைகளை அனுப்புங்கள்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

``இன்னும் 3 நாள்களே இருக்கின்றன; யோசனைகளை அனுப்புங்கள்!"- நிர்மலா சீதாராமன்

நிதி அமைச்சகத்துக்கு யோசனைகள் அல்லது பரிந்துரைகளை அனுப்ப நினைப்பவர்கள்  ‘My Gov’ என்கிற அப்ளிகேஷன் மூலம் தெரிவிக்கலாம். அங்கு உங்களுடைய பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை நேரடியாகச் சமர்ப்பிக்கலாம். PDF ஆவணத்தை இணைக்கும் வசதியும் அதில் இருப்பதால், அதன் மூலமாகவும் தங்களின் விரிவான ஐடியாக்களை சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 20 என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

நிதியமைச்சக பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டதன் மூலம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்குப் பின் நிதி அமைச்சர் பதவியை ஏற்றுள்ள இரண்டாவது பெண் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், மத்தியில் புதிய அமைச்சரவையில் நிதித்துறை இலாகாவைப் பெற்றிருக்கும் ஆறாவது தமிழர் என்கிற பெருமையும் அவருக்கு வந்து சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Vikatan