Published:Updated:

சூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்!

தெ.சு.கவுதமன்
சூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்!
சூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்!

பெட்ரோல், டீசலை, பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் தவிர்த்து, சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விற்பனைக்குக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்துவருகிறது. பெட்ரோல் நிரப்புவதற்கான நிலையங்கள் போதுமானதாக இல்லாததால், பொதுமக்கள் வெகுதூரம் பயணிக்கவும் வரிசையில் காத்திருக்கவும் வேண்டியிருக்கிறது. எனவே, இதனை எளிமைப்படுத்துவதற்காக பெட்ரோலியத்துறை அமைச்சகம் செயல்திட்டத்தை விரைவில் கொண்டுவர உள்ளது. 

சூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்!

இதன்படி சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்களில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு வரக்கூடும். தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனையில் இறங்குவதற்கான விதிமுறைகளைத் தளர்த்தவும் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அடிப்படை உள்கட்டமைப்புக்காக உள்நாட்டுச் சந்தையில் 2,000 கோடி ரூபாயை முதலீடுசெய்வது, 30 லட்சம் டன் கச்சா எண்ணெய் அல்லது அதற்கு ஈடான தொகைக்கு வங்கி உத்தரவாதம் தருவது போன்ற விதிமுறைகள் தளர்த்தப்படக்கூடும். பொருளாதார நிபுணர் கிரித் பாரிக் தலைமையிலான கமிட்டி இதற்காகப் பரிந்துரைசெய்துள்ளது.

சூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்!

இதன்மூலம், பல்வேறு பிராண்டுகளை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் ரீட்டெய்ல், ஃப்யூச்சர் குரூப் மற்றும் சவுதியின் அரம்கோ போன்ற நிறுவனங்கள் இந்த விற்பனையில் இறங்கக்கூடும் எனத் தெரிகிறது. எல்லாம் சரி, இனியாவது பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்பதே மக்களின் முதன்மைக் கேள்வியாக உள்ளது.