Published:Updated:

விளம்பரத்துக்கு மட்டும் ரூ.200 கோடி - விழாக்கால விற்பனைக்கு அதிரடியாகக் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!

தெ.சு.கவுதமன்
விளம்பரத்துக்கு மட்டும் ரூ.200 கோடி - விழாக்கால விற்பனைக்கு அதிரடியாகக் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!
விளம்பரத்துக்கு மட்டும் ரூ.200 கோடி - விழாக்கால விற்பனைக்கு அதிரடியாகக் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!

ஆன்லைன் தீபாவளி விற்பனைக்கான போட்டியில் அமேசானுக்கு எதிராக அதிரடியாகக் களமிறங்க ஃபிளிப்கார்ட் முடிவுசெய்துள்ளது. வழக்கமாக ஒருநாள் தள்ளுபடி விற்பனை அறிவிப்பின் மூலம் பல கோடி லாபம் பார்க்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம், இம்முறை தங்களது விழாக்கால விற்பனையை கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விழாக்கால விற்பனையை 1.5 - 1.7 பில்லியன் டாலர் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. வால்மார்ட் நிறுவனத்தோடான கைகோப்புக்குப்பிறகு பிரமாண்டமான செயல்திட்டங்களை இந்நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.  

'தி பிக் பில்லியன் டேய்ஸ்' என்ற பெயரில், அக்டோபர் பத்தாம் தேதியிலிருந்து 5 நாள்கள் அதிரடி விற்பனை குறித்து அமிதாப்பச்சன் மூலம் விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இவரோடு தீபிகா படுகோனே, விராட் கோலி, தோனி உள்ளிட்ட பிரபலங்களும் கைகோத்து விளம்பரங்களில் வலம்வர உள்ளார்கள். மேலும், தமிழ்நாட்டுக்கு நடிகை தமன்னா உட்பட அந்தந்த மாநிலத்துக்கு ஒரு பிரபலம் என்ற அடிப்படையிலும் பிரபலங்களைக் களமிறக்கவுள்ளது. இவ்விளம்பரங்களுக்காக 200 கோடி ரூபாய்வரை செலவழிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இவர்களின் போட்டியாளரான அமேசான் நிறுவனம், நகரம் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து தங்களது விற்பனையைத் திட்டமிட்டுள்ளனர். ஃப்ளிப்கார்ட், அமேசான் இரண்டு நிறுவனங்களையும் சேர்த்தால், இந்தியாவில் ஆன்லைன் விற்பனையின் 60% சந்தையைத் தங்கள்வசம் வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.