Published:Updated:

கதக் டான்ஸர்... 20 வயதில் மிஸ் இந்தியா அழகி... யார் இந்த சுமன் ராவ்?

மலையரசு
கதக் டான்ஸர்... 20 வயதில் மிஸ் இந்தியா அழகி... யார் இந்த சுமன் ராவ்?
கதக் டான்ஸர்... 20 வயதில் மிஸ் இந்தியா அழகி... யார் இந்த சுமன் ராவ்?

மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்றுள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த சுமன் ராவ்.

கதக் டான்ஸர்... 20 வயதில் மிஸ் இந்தியா அழகி... யார் இந்த சுமன் ராவ்?

2019-ம் ஆண்டுக்கான மிஸ் இந்தியா இறுதிச் சுற்று மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயதான சுமன் ராவ் மிஸ் இந்தியா வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குக் கடந்த 2018-ம் ஆண்டு மிஸ் இந்தியாவாகத் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ், கிரீடத்தை தலையில் சூட்டினார். இதேபோல் தெலுங்கானாவைச் சேர்ந்த சஞ்சனா விஜ் என்ற அழகி மிஸ் இந்தியா ரன்னர் அப் ஆகத் தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர பீகாரைச் சேர்ந்த ஸ்ரேயா சங்கர் மிஸ் இந்தியா யுனைடெட், சத்தீஸ்கரைச் சேர்ந்த ஷிவானி மிஸ் கிராண்ட் இந்தியா ஆகிய பட்டங்களையும் பெற்றனர். 

யார் இந்த சுமன் ராவ்?

பிறந்தது என்னவோ ராஜஸ்தானாக இருந்தாலும், சுமன் வளர்ந்தது பெரும்பாலும் ராஜஸ்தானுக்கு வெளியில்தான். மும்பையில் பள்ளி வாழ்க்கையைக் கழித்தவர் தற்போது டெல்லியில் பி.காம் படித்து வருகிறார். ஆரம்பம் முதலே மாடலிங்கில் சாதிக்க வேண்டும் என அதற்காகத் தயாராகி வருபவர், ஏற்கெனவே மிஸ் ராஜஸ்தான் பட்டத்தையும் வென்றுள்ளார். மாடலிங்கில் மட்டும் இல்லாமல் சுமன் ஒரு நல்ல டான்சரும்கூட. கதக் மற்றும் கிளாசிக் டான்ஸிலும் பேசப்படும் நபராக வளர்ந்து வருகிறார் சுமன்.

கதக் டான்ஸர்... 20 வயதில் மிஸ் இந்தியா அழகி... யார் இந்த சுமன் ராவ்?

மிஸ் இந்தியா போட்டியின் அலங்கார அணிவகுப்பின்போது பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் என்றால் இதற்குத்தான் என வகைப்படுத்துவது குறித்துப் பேசினார். அதில், ``நான் பாலின சமத்துவமின்மை கொண்ட ஒரு சமூகத்திலிருந்து வந்தவள். பெண்களை இதற்குத்தான் என வகைப்படுத்துவது இன்னும் உள்ளன. இந்த இரண்டும் என் முன் இருந்தன. ஒன்று இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது இதை மாற்றுவதற்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இரண்டாவது ஒன்றைத் தேர்வு செய்தேன்" எனக் கூறி ஆச்சர்யப்படுத்தினார். சுமன் இப்போது மட்டுமல்ல எப்போதும் இதேபோல் தன்னம்பிக்கை கொண்ட கருத்துகளை பேசிக்கொண்டிருப்பாராம்.

கதக் டான்ஸர்... 20 வயதில் மிஸ் இந்தியா அழகி... யார் இந்த சுமன் ராவ்?

``வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி நீங்கள் உறுதியாக இருக்கும்போது, உங்கள் உடலின் ஒவ்வொரு நரம்புகளும் வெற்றிகரமான பயணத்துக்காக அந்தத் திசையில் செயல்படத் தொடங்குகின்றன" என எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பாராம் இவர். மிஸ் இந்தியா பட்டத்தை அடுத்து இந்த வருடம் தாய்லாந்து நாட்டில் நடைபெற இருக்கும் மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகிப் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்கிறார் சுமன் ராவ்.

Vikatan