Published:Updated:

`பீகார் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான பிரஸ்மீட்டில் தூங்கிவழிந்தேனா?!' - சர்ச்சையில் மத்திய அமைச்சர்

விகடன் விமர்சனக்குழு

குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழப்பது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய இணையமைச்சர் தூங்கி வழிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

`பீகார் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான பிரஸ்மீட்டில் தூங்கிவழிந்தேனா?!' - சர்ச்சையில் மத்திய அமைச்சர்

பீகாரில் உள்ள முசஃபர்பூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களில், ஏராளமான குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. இதில், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் தூங்கி வழிந்துக்கொண்டிருந்தார்.

`பீகார் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான பிரஸ்மீட்டில் தூங்கிவழிந்தேனா?!' - சர்ச்சையில் மத்திய அமைச்சர்

அவர் தூங்கிக்கொண்டிருந்தது தொடர்பாகக் கேள்வி எழுப்பும்போது,``நான் அனைத்துப் பகுதிகளிலும் கவனித்துக்கொண்டிருந்தேனே தவிர, தூங்கவில்லை” என்று மறுத்துள்ளார். `அதீத வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையில், ``சம்பந்தப்பட்ட பகுதிகளில் குழுக்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்து வருகிறோம். நான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நோயாளிகளைச் சந்திதேன். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்” என்றார். மேலும், குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதில் கடினமான சூழ்நிலையில் மருத்துவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள் என்றும், இந்த நோய்க்கான காரணத்தை அடையாளம் காண அடுத்த ஒரு வருடத்தில் இங்கு ஒரு பல்வகை மருத்துவமனை நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.

`பீகார் குழந்தைகள் உயிரிழப்பு விவகாரம் தொடர்பான பிரஸ்மீட்டில் தூங்கிவழிந்தேனா?!' - சர்ச்சையில் மத்திய அமைச்சர்

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சுகாதாரத்துறை உயர்அதிகாரிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே காயா பகுதியில் இருக்கும் அனுக்ரா நாராயண் மேகத் மெடிக்கல் கல்லூரியில் சிகிச்சை பெற்ற 28 நோயாளிகள் சிகிச்சையின்போதே, உயிரிழந்துவிட்டனர். அம்மருத்துவமனைக்கு வந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டேவுக்கு எதிராக, அப்பகுதியிலிருக்கும் சில கட்சியினர் கருப்புக்கொடி காட்டினர். 

Vikatan