Published:Updated:

`3,276 ரூபாய் லஞ்சம் கொடுத்து இந்தியாவுக்குள் வந்தேன்!' - அதிரவைத்த வங்கதேச நபரின் வாக்குமூலம்

எம்.குமரேசன்
`3,276 ரூபாய் லஞ்சம் கொடுத்து இந்தியாவுக்குள் வந்தேன்!' - அதிரவைத்த வங்கதேச நபரின் வாக்குமூலம்
`3,276 ரூபாய் லஞ்சம் கொடுத்து இந்தியாவுக்குள் வந்தேன்!' - அதிரவைத்த வங்கதேச நபரின் வாக்குமூலம்

இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்தாடாத துறைகளே இல்லை. தற்போது, எல்லையிலும்கூட லஞ்சம் வாங்கிக்கொண்டு பிற நாட்டவர்களை இந்தியாவுக்கு அனுமதிக்கிற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`3,276 ரூபாய் லஞ்சம் கொடுத்து இந்தியாவுக்குள் வந்தேன்!' - அதிரவைத்த வங்கதேச நபரின் வாக்குமூலம்

அஸ்ஸாம் மாநிலம் துபாரி மாவட்டத்தில்,சுகோலியா என்ற நகரத்தில் ,சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர்  நடமாடிக்கொண்டிருந்தார்.  அவரைக் கைதுசெய்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதானவரின் பெயர் அய்னுல் ஹக் என்றும் வங்கதேசத்தின் தகார்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்ட அய்னுல் ஹக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``கடந்த 2013- ம் ஆண்டே நான் இந்தியாவுக்குள் வந்துவிட்டேன். என்னுடன் மேலும்11 பேர் வந்தனர். மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா பகுதியில் இந்தியாவுக்குள் நுழைந்தோம். இதற்காக, வங்கதேச எல்லை பாதுகாப்புப் படையினரிடத்தில்  3,276 ரூபாய் லஞ்சம் கொடுத்தோம். மேற்கு வங்கத்தில் எனக்கு ஆதார் கார்டு எடுக்க ஆசாத் அலி என்பவர் உதவினார். பின்னர், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் வேலைபார்த்தேன். இதுவரைக்கும் என் தந்தைக்கு 7.20 லட்சம் அனுப்பியுள்ளேன். பணம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அஸாம் மாநிலத்தில்  சரிபா பேகம் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு, தற்போது 2 வயதில் மகன் உள்ளான்'' என்று தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில், ஏற்கெனவே வங்கதேசத்தவர்களால் பிரச்னை ஏற்பட்டுக்கொண்டிருக்க, லஞ்சம் வாங்கிக்கொண்டு வெளி நாட்டவர்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

Vikatan