Published:Updated:

`மோடி மீண்டும் வரவே கூடாது!'- புலம்பலில் பக்கத்து நாடு

எம்.குமரேசன்
`மோடி மீண்டும் வரவே கூடாது!'- புலம்பலில் பக்கத்து நாடு
`மோடி மீண்டும் வரவே கூடாது!'- புலம்பலில் பக்கத்து நாடு

ந்திய பொதுத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியிடப்படும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இந்திய தொலைக்காட்சிகள் மட்டுமல்ல, பாகிஸ்தான் தொலைக்காட்சிகளும் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டுவருகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பாரதிய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளதால், பாகிஸ்தான் மக்கள் பரபரப்பாக உள்ளனர்.

`மோடி மீண்டும் வரவே கூடாது!'- புலம்பலில் பக்கத்து நாடு

இந்தியாவின் புதிய பிரதமர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள  நம்மைவிட , அண்டை நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றனர்.  பால்கோட்  தாக்குதலுக்குப் பிறகு, மோடி மீது பாகிஸ்தான் மக்களுக்குப் பயம் வந்துவிட்டதாக, அந்த நாட்டு மீடியாக்கள் சொல்கின்றன.  இதனால்,  பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் நேரடியாக மக்களைச் சந்தித்து, கருத்துகளைக் கேட்டு வெளியிட்டுவருகின்றன. பெரும்பாலான பாகிஸ்தானியர்கள், பால்கோட் தாக்குதலால் அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க  வந்தால், மீண்டும் பாகிஸ்தானுக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர். 

லாகூரைச் சேர்ந்த ஷாகி அலாம் , 'மோடி வரவே கூடாது. அவர், எங்கள் நாட்டின்மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியவர். மீண்டும் பிரதமரானால் பிரச்னைதான் ஏற்படும்'  என்று புலம்புகிறார். ஆஷிஷ் என்பவர், ' பா.ஜ.க  மீண்டும் முழு மெஜாரிட்டியுடன் வர வாய்ப்பில்லை. மெஜாரிட்டி இல்லாத நிலையில், மோடி தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாது. அது, பாகிஸ்தானுக்கு நல்லது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.  

`மோடி மீண்டும் வரவே கூடாது!'- புலம்பலில் பக்கத்து நாடு

ஆனால், வெளிநாடு வாழ் பாகிஸ்தான் மக்கள், வேறு விதமான கருத்துகளை முன் வைக்கின்றனர். மோடியே மீண்டும் இந்தியப் பிரதமராக வர வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர்.  லண்டனைச் சேர்ந்த பாகிஸ்தான் தொழிலதிபர் ரியாஸ் , ' மோடி வந்தால்தான் பாகிஸ்தான் மண்ணில் இருந்து தீவிரவாதத்தை வேரறுக்க முடியும். எங்கள் தாய்நாடு தீவிரவாதிகள் பிடியில் இருந்து விடுபடும் ' என்கிறார். 

ஏற்கெனவே,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 'இந்தியப் பிரதமராக மோடி மீண்டும் வந்தால்தான் காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க உதவியாக இருக்கும்' என்ற கருத்தை முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது. 

Vikatan