Published:Updated:

``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க!''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு

எம்.குமரேசன்
``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க!''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு
``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க!''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு

ந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியடைய, சந்திரபாபு நாயுடு முதலமைச்சர் பதவியை இழந்தார். புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். தற்போது, ஆந்திர சட்டமன்ற  எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு ஹைதராபாத்தில் கட்சி கூட்டத்தில் பங்கேற்கச் செல்ல விஜயவாடா விமான நிலையத்துக்கு நேற்று வந்தார். நாயுடுவுக்கு Z+  வகை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க!''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு

எனினும், விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடத்தில் சோதனை நடத்தினார்கள். அதோடு, விமான நிலையத்திலிருந்து உள்ளே சென்று விமானம் ஏற அவருக்குத் தனி வாகனமும் அளிக்கப்படவில்லை. `சார்.. நீங்கள் பொதுமக்களுடன் பேருந்தில் பயணித்துச் செல்லலாம்' என்று கூறிவிட்டனர். வேறு வழியில்லாமல் பயணிகளுடன் பயணிகளாகப் பேருந்தில் பயணித்து விமானம் நிற்கும் இடத்தை அடைந்தார் தெலுங்கு தேச கட்சித் தலைவர். விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டது ஆந்திராவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து கொண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆந்திர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் சின்ன ராஜப்பா, `சந்திரபாபு நாயுடு Z+ பாதுகாப்பு பெற்றவர். விமான நிலையத்தில் அவரை அவமதித்தது, அவருடன் இருந்த Z+ அதிகாரிகளையும் அவமதித்தது போலத்தான். பல ஆண்டுக்காலம் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். ஒரு போதும் இப்படி ஒரு அவமதிப்பு நேர்ந்ததில்லை. மத்திய அரசு சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.

தெலுங்கு தேச கட்சியின் செய்தித் தொடர்பாளர் புதா வெங்கண்ணா, `சமீபத்தில் சந்திரபாபு நாயுடுவின் கான்வாயில் உள்ள இரு போலீஸ் ஜீப்களை ஆந்திர போவீஸ் குறைத்தது. சந்திரபாபு நாயுடுவின் காரை விமான நிலையத்தின் வாயில் வரையும் அனுமதிக்கவில்லை.  சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்டது அதிகாரத் திமிரை காட்டுகிறது' என்று சாடியுள்ளார். 

Vikatan