Published:Updated:

மோடியைவிட மவுசு ஜாஸ்தி! - ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு எம்.பி-க்கள் அளித்த வரவேற்பு

தினேஷ் ராமையா
மோடியைவிட மவுசு ஜாஸ்தி! - ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு எம்.பி-க்கள் அளித்த வரவேற்பு
மோடியைவிட மவுசு ஜாஸ்தி! - ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு எம்.பி-க்கள் அளித்த வரவேற்பு

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள், மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, எம்.பி-க்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். 

மோடியைவிட மவுசு ஜாஸ்தி! - ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு எம்.பி-க்கள் அளித்த வரவேற்பு

Photo Credit: Loksabha TV

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும்  முடிவுகள், கடந்த மே 23-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், பா.ஜ.க 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாக, மோடி தனது அமைச்சரவையுடன் பதவியேற்றுக்கொண்டார். 
மக்களவைத் தேர்தலுக்குப் பின் முதல்முறையாக இன்று நாடாளுமன்றம் கூடியது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட 17-வது மக்களவையின் உறுப்பினர்கள், எம்.பி-க்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். முன்னதாக, பா.ஜ.க-வின் வீரேந்திர குமார், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

அமேதி தொகுதி எம்.பி-யும் ஜவுளித்துறை அமைச்சருமான ஸ்மிருதி இரானி பெயர் வாசிக்கப்பட்டபோது, மக்களவையே அதிர்ந்தது. உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களவையில் பதவியேற்புக்காக ஸ்மிருதி இரானி அழைக்கப்பட்டபோது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்கள், பா.ஜ.க எம்.பி-க்கள் மேசையைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரைக் காட்டிலும் ஸ்மிருதி இரானிக்குக் கிடைத்த வரவேற்பு பிரமாண்டமானதாக இருந்தது.

மோடியைவிட மவுசு ஜாஸ்தி! - ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு எம்.பி-க்கள் அளித்த வரவேற்பு

Photo Credit: Loksabha TV

அமைச்சர்கள், எம்.பி-க்கள் ஆகியோர் மேசையைத் தட்டிய ஓசை ஓய நீண்ட நேரம் ஆனது. இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட ஸ்மிருதி இரானி, இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் மற்றும் மற்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். குறிப்பாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கும் வணக்கம் தெரிவிக்கவே, அவரும் பதிலுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். இன்றைய கூட்டத் தொடரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. 

மோடியைவிட மவுசு ஜாஸ்தி! - ராகுலை தோற்கடித்த ஸ்மிருதி இரானிக்கு எம்.பி-க்கள் அளித்த வரவேற்பு

இன்றைய கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோரும் எம்.பி-க்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்புக்காக மோடியின் பெயர் அழைக்கப்பட்டதும், பா.ஜ.க உறுப்பினர்கள் மேசையைத் தட்டியும் `மோடி வாழ்க' என்று கோஷம் எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

Vikatan