Published:Updated:

`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்

விகடன் விமர்சனக்குழு

பீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஒருபுறம் தீயாய் பரவ, மறுபுறம் அமைச்சர்கள் பெரிதாக கண்டுகொள்ளாமல் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். 

`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்

பீகாரில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது மூளைக்காய்ச்சல். இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இதுவரை 100-க்கும் அதிகமான குழந்தைகள் கடந்த 2 வாரத்தில் மட்டும் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பலி எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. முசாஃபர்பூரில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்

செய்தியாளர் சந்திப்பின்போது, மங்கள் பாண்டே கேட்ட கேள்வி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், மான்செஸ்டரில் நடைபெற்றுவரும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை போட்டியில், `எத்தனை விக்கெட் இதுவரை விழுந்துள்ளது?’ என்று கேட்டார். மூளைக்காய்ச்சல் தொடர்பான அவசர பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது இந்தக் கேள்வி சர்ச்சையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளான, ராஷ்ட்ரிய ஜனதா தள், காங்கிரஸ், ஹிந்துஸ்தான் ஆவம் மோர்சா, இடது சாரிகள், மங்கள் பாண்டே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்

ஹர்ஷன் வர்தன், ``மூளைக்காய்ச்சலால் உண்டாகியிருக்கும் மோசமான நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” என்று கூறும்போது, மங்கள் பாண்டே கிரிக்கெட் ஸ்கோரை தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். ``மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மூளைக்காய்ச்சலால் மக்கள் உயிரிழப்பதைக்காட்டிலும், கிரிக்கெட் ஸ்கோரை தெரிந்துகொள்வதில்தான் கவனம் செலுத்துகிறார்” என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க. முன்னதாக நடந்த மற்றொரு ப்ரஸ்மீட்டில், மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார், மூளைக்காய்ச்சல் தொடர்பாக ஹர்ஷ வர்தன் பேசிக்கொண்டிருக்க, இணையமைச்சரோ தூங்கிக்கொண்டிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, `நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்’ என்று சமாளித்துள்ளார். மக்கள் ஒருபுறம் மூளைக்காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருக்க, அமைச்சர்களின் இப்படியான செயல்பாடுகள் விரும்பத்தகாதவையாகவே இருக்கின்றன. 

Vikatan