Published:Updated:

`கோ பேக் நிதிஷ்குமார்!’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு

விகடன் விமர்சனக்குழு
`கோ பேக் நிதிஷ்குமார்!’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு
`கோ பேக் நிதிஷ்குமார்!’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு

பீகாரில், மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்வையிடச் சென்ற  அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு, போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

`கோ பேக் நிதிஷ்குமார்!’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு


பீகார் மாநிலம் முசாபர்பூரில், மூளைக்காய்ச்சல் பெரும் பீதியைக்கிளப்பியுள்ளது. இதனால் ஏற்படும் தொடர் மரணங்கள், அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை 100-க்கும் அதிகமானோர் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.  இதன் எதிரொலியாக, அம்மாநிலத்தில் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 22-ம் தேதி வரை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சல் பாதிப்பால் ஏராளமான குழந்தைகள் சிகிச்சைபெற்றுவருகின்றனர். ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த குழந்தைகளில் பெரும்பலானோர் உயிரிழந்துள்ளனர்.

`கோ பேக் நிதிஷ்குமார்!’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு

முசாபர்ஃபூரில் உள்ள 151 குழந்தைகள் சிகிச்சைபெற்றுவருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீகிருஷ்ணா மருத்துவமனையை ஆய்வுசெய்யச் சென்றார், மாநில முதல்வர் நிதிஷ்குமார். அப்போது, அங்கிருந்த குழந்தைகளின் பெற்றோர்கள், `கோ பேக் நிதிஷ்’ என்று முழக்கமிட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.  3 வாரங்கள் கழித்து முதலமைச்சர் மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தது, அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், முதல்வர் வருகைதந்த நாளன்று மட்டுமே மருத்துவமனையில் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மற்ற நாள்களில் 20-25 ரூபாயக்கு வாட்டர் பாட்டில்களை வாங்க மருத்துவ நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர்கள், ``முதல்வர் வருகைதந்த நாளன்று மட்டுமே மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவமனை வாசலில் வாட்டர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. மற்ற நாள்களில் அவர்கள் அதுகுறித்து கண்டுகொள்வதேயில்லை” என்றனர். 

Vikatan