Published:Updated:

`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க!' - திட்டித்தீர்த்த குமாரசாமி

ஆ.பழனியப்பன்
`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க!' - திட்டித்தீர்த்த குமாரசாமி
`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க!' - திட்டித்தீர்த்த குமாரசாமி

“போலீஸை வைத்து தடியடி நடத்தச் சொல்லவா? நீங்கள் மோடிக்கு ஓட்டு போட்டீர்கள். ஆனால், உங்கள் பிரச்னைகளை நான் தீர்க்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்... உங்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது” என்று மக்களைப் பார்த்து கடும் கோபத்துடன் பேசினார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி.

`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க!' - திட்டித்தீர்த்த குமாரசாமி

கர்நாடகா முதல்வர் குமாரசாமி, `கிராமத்தில் தங்கும்’ திட்டத்துக்காக ரெய்ச்சூர் என்கிற கிராமத்துக்கு அரசுப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீர்வுகாண்பதுதான் ‘கிராமத்தில் தங்கும்’ திட்டத்தின் நோக்கம்.

ஏர்மருஸ் ஆய்வுப்பணி மாளிகையிலிருந்து அரசுப் பேருந்தில் முதல்வர் புறப்பட்டார். அப்போது, ஏர்மருஸ் அனல்மின் நிலையம் மற்றும் ஹுட்டி தங்கச் சுரங்கம் ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கையைக் கோஷமாக எழுப்பினர். பிறகு, முதல்வர் சென்ற பேருந்தை அவர்கள் மறித்தனர். அதனால் கடும் கோபமடைந்த முதல்வர் குமாரசாமி, “போலீஸை வைத்து தடியடி நடத்தச் சொல்லவா? நீங்கள் மோடிக்கு ஓட்டு போட்டீர்கள். ஆனால், உங்கள் பிரச்னைகளை நான் தீர்க்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்... உங்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது” என்று பேசியுள்ளார்.

`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க!' - திட்டித்தீர்த்த குமாரசாமி

ஏர்மருஸ் அனல்மின் நிலையத்தில் சுமார் 750 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஓராண்டுக்கு மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை தொடர்பாக ஏர்மருஸ் பங்களாவில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுவதாக முதல்வர் கூறி இருந்துள்ளார். ஆனால், அவர்களைச் சந்திக்காமல் முதல்வரின் பேருந்து கடந்துசெல்லவே, அவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மறியலைக் கைவிட மாட்டார்கள் என்று தெரிந்த பிறகு, பேருந்தை விட்டு இறங்கிவந்த குமாரசாமி, தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர், ஒரு வாரத்துக்குள் பிரச்னைகளைத் தீர்ப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்.  

Vikatan