Published:Updated:

வடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் - இந்தி படிக்கும் கேரள போலீஸார்!

பி.ஆண்டனிராஜ்
வடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் -   இந்தி படிக்கும் கேரள போலீஸார்!
வடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் - இந்தி படிக்கும் கேரள போலீஸார்!

கேரளாவில், வடமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தொழில் நிமித்தமாக அதிகமாக வந்து தங்கியிருக்கும் நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தும் வகையில் கேரள போலீஸார் இந்தி பேசுவதற்கு டியூஷன் போகிறார்கள். 

வடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் -   இந்தி படிக்கும் கேரள போலீஸார்!

கேரளாவுக்கு, வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் தொழிலாளர்களாக வருகிறார்கள். அவர்கள், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறார்கள்.

குறிப்பாக, கிராமப் பகுதிகளிலும் ஏராளமானோர் தொழிலாளர்களாகத் தங்கியிருக்கிறார்கள். அவர்கள்மீது குற்ற வழக்குகள் பதிவாகும்போது அல்லது விசாரணைக்காக அழைத்துச்செல்லும்போது, இந்தி பேசத் தெரியாமல் போலீஸார் திணறுகிறார்கள். அதனால் போலீஸாருக்கு இந்தி பேச கற்றுக்கொடுக்கப்படுகிறது. 

வடமாநிலத்தவரிடம் விசாரணை நடத்துவதில் சிரமம் -   இந்தி படிக்கும் கேரள போலீஸார்!

கோழிக்கோடு மாவட்டத்தில், முதல் கட்டமாக 42 போலீஸார் இந்தி கற்றுவருகிறார்கள். இதுகுறித்து போதை தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளரான அஷ்வகுமார் கூறுகையில், ’’கோழிக்கோடு மாவட்டத்தில் 'ஜனமைத்ரி சுரக்‌ஷா' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, இங்குள்ள 21 கிராமப்புற காவல் நிலையங்களில் இருந்து தலா இரண்டு காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வாரத்தில் ஐந்து நாள்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டுவருகிறார்கள்.  

மாவட்டத்தின் மூலை முடுக்குகளில் உள்ள மக்களையும் நேரில் சந்தித்துப் பேசுவார்கள். அப்போதுதான், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இங்கே தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு ஆங்கிலமோ மலையாளமோ தெரிந்திருக்கவில்லை. நமது காவலர்களுக்கு இந்தி தெரியாததால், அவர்களிடம் விசாரணை நடத்த முடியாத நிலை இருந்தது. 

அதனால், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரம் இந்தி பேசும் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். பள்ளிகளில் உள்ள இந்தி ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியைக் கொடுக்கிறார்கள். கடந்த ஞாயிறு அன்று (23-ம் தேதி), முதல்கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கியிருக்கிறது. இந்தப் பயிற்சியின்மூலம் நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.  

Vikatan