Published:Updated:

இரவில் ஆட்டம்... பாட்டம்! - இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடியவருக்கு நேர்ந்த சோகம்

பிரேம் குமார் எஸ்.கே.
இரவில் ஆட்டம்... பாட்டம்! - இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடியவருக்கு நேர்ந்த சோகம்
இரவில் ஆட்டம்... பாட்டம்! - இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடியவருக்கு நேர்ந்த சோகம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி, நேற்று நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியை உலகமெங்கும் இருக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அப்படிதான் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் பேலா கிராமத்தைச் சேர்ந்த வினய் பிரகாஷ் என்பவர் கொண்டாடினார். 

இரவில் ஆட்டம்... பாட்டம்! - இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடியவருக்கு நேர்ந்த சோகம்

உற்சாகத்தின் உச்சத்திலிருந்த அவர், சாலையில் ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடியிருக்கிறார். அப்போது, அவருக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள், இவரின் கொண்டாட்டத்தைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று அதிகாலை ஊரின் ஓரத்தில் இருந்த அவரது குடிசை தீ பிடித்து எரிந்ததை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்திருக்கிறார்கள். முழுவதுமாக எரிந்த குடிசையுடன் பிரகாஷும்  தீயில் கருகி பலியானார். இந்நிலையில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், `பலியான பிரகாஷ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர், அவர் கொண்டாடுவதைத் தடுத்தவர்கள் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வாக்குவாதத்தின் காரணமாகத்தான், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வினய் பிரகாஷை கொலை செய்துவிட்டனர்'' எனக் குற்றம் சாட்டியுள்ளனர். 

இரவில் ஆட்டம்... பாட்டம்! - இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடியவருக்கு நேர்ந்த சோகம்

இந்தச் சம்பவம் தொடர்பாக, எஸ்.சி./எஸ்.டி ஆணையம் உடனடியாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாகக் கைதுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்தியாவின் வெற்றியை நாடே கொண்டாடிவரும் இந்த வேளையில், வினய் பிரகாஷின் கொண்டாட்டம் மட்டும் சோகத்தில் முடிந்திருக்கிறது.