Published:Updated:

`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது!' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு

ராம் பிரசாத்

`ஐஎஸ்ஐஎஸ் வருகிறது... ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது?' மும்பை வணிகவளாகத்தின் முதல் தளம் மற்றும் ஓய்வறையில் கிடந்த காகிதத் துண்டுகளில் இருந்த வாசகம், பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.  

இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.  அதில், இரண்டு மொபைல் நம்பர்கள் கொடுக்கப்பட்டன. அந்த எண்களை போலீஸார் ஆய்வுசெய்ததில், அது ஒரு பெண் மற்றும் ஆணுடையது எனத் தெரியவந்தது. அந்தக் காகிதத்தில் இருந்த கையெழுத்துகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இதனையடுத்து, தானே போலீஸாரும் தீவிரவாத தடுப்பு காவலர்களும் களத்தில் இறங்கினர். தொலைபேசியில் இருந்த எண்ணைக்கொண்டு விசாரணையைத் துரிதப்படுத்தினர். அந்த எண்ணுக்குச் சொந்தமானவர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றனர் என்ற தகவல் காவல்துறையினருக்குத் தெரியவந்தது.

`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது!' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு

அந்தப் பெண்ணிடம் விசாரித்ததில், அவருக்கு இந்தக் காகிதத்தில் இருந்த வாசகங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், அவரது எண்கள் இருந்ததும் கூடுதல்  அதிர்ச்சியளித்துள்ளது. மற்றொரு எண் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததுகுறித்து  அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அப்போது, அது தன்னுடைய ஆண் நண்பர் ஒருவருடைய எண் என்றும், அவருடன் தற்போது தொடர்பில் இல்லை, அவன் இதுபோன்ற தீவிரவாத மிரட்டல் விடுத்திருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த நபரின் முகவரியை போலீஸார் கைப்பற்றினர். இதனையடுத்து, அவரது வீடு அமைந்திருந்த விக்ரோலி பகுதிக்கு விரைந்தனர். அந்தப் பெண்ணின் நண்பரான Ketan Ghodke-யை காவல்துறையினர் விசாரித்தனர்.

`ஸ்லீப்பர் செல் ஆக்டிவேட் ஆகிவிட்டது!' - காதலியைப் பழிவாங்க மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு

போலீஸாரின் விசாரணையில்,  தீவிரவாத மிரட்டல் விடுத்ததை அந்த நபர் ஒப்புக்கொண்டார். காகிதத்தில் இருந்த கையெழுத்து தன்னுடையதுதான் என்றும், அந்தப் பெண்ணும் நானும் காதலித்துவந்தோம். தற்போது அவர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார். அந்தப் பெண்ணையும், தற்போது அவளைக் காதலிக்கும் நபரையும் தொந்தரவு செய்வதற்காகவே தான் இவ்வாறு செய்ததாகத் தெரிவித்துள்ளார். தனக்கு, பயங்கரவாதிகளிடையே எந்தத் தொடர்பும் கிடையாது என்றும், முன்னாள் காதலியைப் பழிவாங்கவே இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார். காதலியைப் பழிவாங்க நினைத்தவர், தற்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்.

Vikatan