Published:Updated:

புல்வாமாவில் மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல்! - ராணுவ வாகனம் சேதம்

ராம் பிரசாத்
புல்வாமாவில் மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல்!  - ராணுவ வாகனம் சேதம்
புல்வாமாவில் மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல்! - ராணுவ வாகனம் சேதம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் 4 மாதங்களுக்குப் பிறகு தற்போது, ராணுவ வீரர்களின் வாகனத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புல்வாமாவில் மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல்!  - ராணுவ வாகனம் சேதம்

ராணுவ வீரர்களின் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும்போது பாதுகாப்புக்காக முன்னால் ஒரு வாகனம் அனுப்பப்படும் கண்ணிவெடி போன்ற தாக்குதல்களில் இருந்து வீரர்கள் காப்பதற்காக பாதுகாப்பு வாகனம் செல்லும்.  தற்போதைய தாக்குதலில் ஐ.இ.டி வகை குண்டுகளைப் பயன்படுத்தியதால் அந்த வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. அதில் இருந்த வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு, ராணுவ வீரர்களின் வாகனத்தின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், கற்களை கொண்டு சிலர் தாக்கியுள்ளனர். இதில், 3 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த ராணுவ வீரர்கள் ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.

இதுதொடர்பாக ராணுவம் தரப்பில் கூறப்படுவதாவது, பயங்கரவாதிகளின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. ராணுவ வீரர்கள் பத்திரமாக உள்ளனர். சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிமுழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan