Published:Updated:

`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..!’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்

பிரேம் குமார் எஸ்.கே.
`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..!’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்
`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..!’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்

டிக் டாக் கலாசாரம் பரவியுள்ள காலம் இது. சிலர் தங்களிடம் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் களமாக இதைப் பாரத்தாலும் இதன் மூலம் பல்வேறு விதமான சிக்கல்களும் எழுகின்றன. முன்னர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்தச் செயலி, தற்போது தடை நீக்கம் காரணமாக மீண்டும் தலை தூக்கியுள்ளது இந்த மோகம்.

`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..!’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்

இந்த டிக் டாக் மோகம் காரணமாக புதுடெல்லியில் 20 வயது இளைஞர் ஒருவர் தற்போது சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார். 
 
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை சப்ரா என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில்,  ``நான் எனது ஐபோன் XS போனை விற்பனைக்காக ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் பதிவேற்றி இருந்தேன். அப்போது ஜதின் நாகர் என்பவர் என்னைத் தொடர்புகொண்டு போனை வாங்க விருப்பம் தெரிவித்தார். விலை 80,000 என முடிவு செய்துகொண்டோம். மாலை 6 மணி அளவில் போனை கொடுக்க நாங்கள் ப்ரீத் விஹார் சிக்னல் அருகே சந்தித்துக்கொண்டோம். அப்போது எதிர்பாராத நேரத்தில் எனது போனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்” எனக் கூறி புகார் அளித்தார். 

`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..!’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்

இது தொடர்பான விசாரணையில் போலீஸார் கடந்த சனிக்கிழமை நாகர் என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்த போனை கைப்பற்றினர். பொதுவாகப் போனை திருடுபவர்கள் அடுத்த நிமிடமே அதை விற்று விடுவார்கள். இதை விற்காமல் அவர் வைத்திருந்ததற்கான காரணத்தைக் கேட்ட போலீஸார் அதிர்ந்துவிட்டனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகரைச் சேர்ந்த இந்த ஜதின் நாகர், டிக் டாக் செயலில் வீடியோக்களை ஏற்றி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார். தன்னிடம் நல்ல போன் இல்லாத காரணத்தால் நல்ல வீடியோக்களை பண்ண முடியாமல் இருந்திருக்கிறார், ஐபோன் இருந்தால் அதன் வீடியோ அழகாக இருக்கும் என்றும் தெளிவாக இருக்கும் என்றும் கருதி திருடியிருக்கிறார். 

`ஐபோன் மட்டும் இருந்தா நம்ம லெவலே வேற..!’ -டிக் டாக் மோகத்தால் கைதான இளைஞர்

போலீஸார் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள நாகர் ஒரு தனியார் உணவு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், அவர் மீது இதுவரை எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

Vikatan