Published:Updated:

2030-க்குப் பின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனை! நிதி ஆயோக்கின் யோசனை

மலையரசு
2030-க்குப் பின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனை! நிதி ஆயோக்கின் யோசனை
2030-க்குப் பின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனை! நிதி ஆயோக்கின் யோசனை

'2030-ம் ஆண்டுக்குப் பிறகு, எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நிதி ஆயோக் கூறியுள்ளது. சமீபத்தில் நடந்த நிதி ஆயோக்கின் கூட்டத்தில் இதற்கான திட்டம் முன்மொழியப்பட்டு, கேபினெட் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2030-க்குள் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் தயாரிப்பை நிறுத்தவும் சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் முன்வந்துள்ளது. இதற்காக, எலெக்ட்ரிக் தொழில்நுட்பங்கள்கூடிய ஈ-நெடுஞ்சாலைகளை உருவாக்கும் விதமாக, ரோடு மேப் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்திசெய்வதில் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வரும் இந்தச் சூழ்நிலையில், அரசின் இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது. 

2030-க்குப் பின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனை! நிதி ஆயோக்கின் யோசனை

முதல் கட்டமாக, 2025-க்குள் டூவீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவற்றை மக்கள் பயன்படுத்தும் வகையில் சரியான வழிமுறைகளை மத்திய போக்குவரத்து அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்றும் நிதி ஆயோக் வலியுறுத்தியுள்ளது. இதேபோல பொதுத்துறை நிறுவனங்களிலும் 2030-க்குள் எலெக்ட்ரிக் வாகனங்களை மாற்றியிருக்க வேண்டும் என்று கனரக தொழில்கள் அமைச்சகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால், ஜிகா ஸ்கேல் பேட்டரி தொழில்நுட்பம் அவசியமாகிறது. இதனைத் தயாரிக்க விரும்பும் முதலீட்டார்களுக்கு 8,000 கோடி அளவுக்கு மானியம் வழங்கலாம் எனவும் நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. 

2030-க்குப் பின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனை! நிதி ஆயோக்கின் யோசனை

3 லட்சம் கோடி மிச்சம்!

வாகனங்கள் அதிகரிப்பால், இந்தியாவில் குரூடாயிலின் தேவை அதிகமாகியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டுவருவதன் மூலம் 3 லட்சம் கோடி அளவுக்கு குரூடாயில் இறக்குமதியில் மிச்சப்படுத்தலாம். இதனால்தான், எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்ய வரும் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கலாம் எனத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. முற்றிலும் வரி விலக்கு, நிலம் கையப்படுத்தலில் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அடங்கிய ஒரு திட்டத்தை கேபினெட்டின் ஒப்புதலுக்கு நிதி ஆயோக் அனுப்பியுள்ளது.

Vikatan