Published:Updated:

``அம்மாவின் மடியில் மரணிக்க விரும்புகிறேன்!" - ஒரு கைதியின் விருப்பம்

ராம் பிரசாத்
``அம்மாவின் மடியில் மரணிக்க விரும்புகிறேன்!" - ஒரு கைதியின் விருப்பம்
``அம்மாவின் மடியில் மரணிக்க விரும்புகிறேன்!" - ஒரு கைதியின் விருப்பம்
``அம்மாவின் மடியில் மரணிக்க விரும்புகிறேன்!" - ஒரு கைதியின் விருப்பம்


'அம்மாவின் மடியில் மரணிக்க விரும்புகிறேன்' என விசாரணைக் கைதி ஒருவர் உச்சநீதிமன்றத்துக்கு எழுதிய கடிதம் தற்போது கவனம் பெற்றுள்ளது.  

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்த நபர் கள்ளநோட்டு வைத்திருந்த குற்றத்துக்காக கடந்தாண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் ஜெய்ப்பூர் சிறையில் விசாரணைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.  வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாய்ப்புற்றுநோயானது வாயின் உட்புறத்தில், உதடுகளில், நாக்கு, கன்னங்களில் , நாக்கின் அடிப் பகுதியில், வாய் மேலண்ணம், பற்களின் மத்தியில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புகைபிடித்தல், புகையிலை பழக்கத்தால் இந்த நோய் வருகிறது.

புற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உள்ளது. அந்த நபர் தனது நாள்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு கடந்த 8 மாதங்களாக  ரேடியோதெரபி (கதிர்வீச்சு) சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி  நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால் அவருடைய ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் கிடைக்காததால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை அணுகினார். எனது நாள்கள் எண்ணப்படுகிறது கடைசிக் காலத்தை எனது குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன். எனவே, ஜாமீன் வழங்கும்படி தெரிவிக்கப்பட்டது. கைதியின் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தனது கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். அந்த மனுவில்  “என் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்கு தொடர்பான விசாரணை முடிவதற்குள் ஒன்று நான் இறந்துவிடலாம் அல்லது புற்றுநோய் தாக்கத்தினால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியமாகி விடலாம். நான் எனது இறுதிநாள்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன். எனது இறுதிநாள்களை எனது குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன். எனது தாயின் மடியில் மரணிக்க விரும்புகிறேன்'' எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அனிருதா போஸ் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதுதொடர்பாக ஜூன் 5-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ராஜஸ்தான் மாநில காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Vikatan