Published:Updated:

`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்!' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி

மலையரசு
`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்!' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி
`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்!' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி

குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தர வேண்டும் என உத்தரப்பிரதேச விவசாயி ஒருவர் பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார். 

`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்!' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரபால் சிங். விவசாயியான இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்தான் பிரதமர் மோடிக்கு இப்படி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். எதற்காக என்றால்... இவரது ஊர் பகுதியில் உள்ள தண்ணீர் அதிகப்படியான உப்புடன் இருக்கிறதாம். இதைக் குடிக்க முடியவில்லை. இதுதொடர்பாகப் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்பதால் இப்படி ஒரு முடிவுக்கு அவர் வந்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ளார் சந்திரபால் சிங், ``இந்த தண்ணீரை யாருமே குடிக்க முடியவில்லை. அதிகப்படியான உப்பால் விவசாயப் பயிர்களும் கருகிவிடுகின்றன. என்னுடைய குடும்பத்துக்கு என்னால் பாட்டில் தண்ணீர் வாங்கிக்கொடுக்க முடியவில்லை. பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் செவி கொடுக்க மறுக்கிறார்கள். 

`குடிக்கத் தண்ணீர் இல்லை; குடும்பத்தோடு தற்கொலைக்கு அனுமதியுங்கள்!' - மோடிக் கடிதம் எழுதிய விவசாயி

இதனால்தான் எங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளோம். நாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் பிரதமர் மோடி அனுமதி கொடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த பிரச்னை ஹத்ராஸ் மாவட்டத்தில் எழுவது இது முதல் முறையல்ல. ``இந்த ஏரியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இதே பிரச்னை தான். ஆடு, மாடுகள்கூட இந்த உப்பு நீரைக் குடிப்பதில்லை. நல்ல தண்ணீருக்காகத் தினமும் மூன்று, நான்கு கிலோ மீட்டர் நடந்து செல்கிறோம்" என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Vikatan