Published:Updated:

தாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம்! - பாத்ரூமில் நடந்த சோகம்

ராம் பிரசாத்
தாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம்! - பாத்ரூமில் நடந்த சோகம்
தாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம்! - பாத்ரூமில் நடந்த சோகம்
தாய் கண்விழித்தபாேது குழந்தையைக் காணோம்! - பாத்ரூமில் நடந்த சோகம்

போபாலில் 3 வயதுச் சிறுமி தண்ணீர் வாளியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலை சேர்ந்தவர் சுரேந்திர ரகுவன்ஷி. இவருக்குத் திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று குழந்தை தன் தாயுடன் படுத்து உறங்கியுள்ளது. சனிக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதையடுத்து வீட்டில் தேடியுள்ளனர். அப்போது குளியலறையில் தண்ணீர் வைத்திருக்கும் வாளியில் பேச்சு மூச்சற்ற நிலையில் குழந்தை இருந்துள்ளது. இதனால் பதறிய குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  சிகிச்சை பலனளிக்காமல் குழுந்தை இறந்துவிட்டது. 

இதுதொடர்பாகக் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். சுரேந்திராவுக்கும் அவரின் மனைவிக்கும் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதற்காகச் சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். மருந்து சாப்பிட்டதில் இருவரும் அயர்ந்து உறங்கிவிட்டனர். இந்தச் சமயத்தில்தான் குழந்தை படுக்கை அறையில் இருந்து எழுந்து குளியலறைக்குச் சென்றுள்ளது. வாளிக்குள் விழுந்துள்ளது. சுரேந்திர தம்பதிக்கு இந்த ஒரு குழந்தைதான் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். அதற்குள் இந்த விபரீதம் நடந்துள்ளதாகக்  காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன்புகூட குழந்தை குளியலறைக்கு நடந்துசென்றுள்ளது. ஆனால், அப்போது பெற்றோர்கள் பார்த்துத் தூக்கி வந்துள்ளனர்.

Vikatan