Published:Updated:

`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை!

ராம் பிரசாத்
`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை!
`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை!
`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை!

இந்தியா, அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இன்னும் 8 வருடங்களில் மாறும் என ஐ.நா-வின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஐ.நா-வின்  பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள்துறை  வெளியிட்டுள்ள ‘The World Population Prospects 2019’அறிக்கையில்,  அடுத்த 30 ஆண்டுகளில், உலகின் மக்கள்தொகை தற்போதைய அளவைவிட 2 பில்லியன் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டில், உலக மக்கள் தொகை 11 பில்லியனை எட்டும் எனவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  2050-ல் 9.7 பில்லியனாக இருக்கும்.  தற்போது 7.7 பில்லியனாக உலக மக்கள்தொகை இருக்கிறது.

உலக மக்கள்தொகை அதிகரிக்கும் எண்ணிக்கையில்  இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேஷியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. 2027-ல் சீனாவின் மக்கள்தொகையைவிட இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துக் காணப்படும் எனக் கூறப்படுகிறது. சீனாவில் தற்போதைய மக்கள்தொகை 1.43 பில்லியனாகவும், இந்தியாவின் மக்கள்தொகை 1.37 பில்லியனாகவும் உள்ளது. சீனாவும் இந்தியாவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரு இடங்கள் இந்த நாடுகளிடம்தான் இருக்கிறது. மக்கள்தொகை அதிகரிப்பில், இந்தியா மற்றும் நைஜீரியா 23 சதவிகிதத்தை கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் அமெரிக்க, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அதற்கு அடுத்த வரிசையில் இருக்கிறது. 

உலக அளவில் கருவுறுதல் சதவிகிதம் குறைந்து  காணப்படுகிறது. 1990-களில் 3.3 சதவிகிதமாக இருந்தது. 2019-ல் 2.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 2050-ம் ஆண்டில் 2.2 சதவிகிதமாகக் குறையும் எனத் தெரிகிறது. அதேபோல் மக்களின் ஆயுள் காலமும் குறையும் என கூறப்படுகிறது. வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், வளரும் நாடுகள் மற்றும் ஏழ்மையான நாடுகளில்தான் மக்கள்தொகை அதிகரித்துக் காணப்படுகிறது. அந்த நாடுகளுக்கு இது மேலும் பிரச்னையை உருவாக்கும். வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு,  ஆரோக்கியம், கல்வி எனப் பல விஷயங்களில் சிக்கலை ஏற்படுத்தும்.

வளர்ந்த நாடுகள், மக்கள்தொகை அதிகரிப்பில் கவனம் செலுத்திவருவதாகவும். கடந்த 2010-ல் இருந்து பார்க்கும்போது, 27 நாடுகள் தங்கள் மக்கள்தொகையை 1 சதவிகிதம் குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகை அதிகரிப்புக்கு எதிராக சீனா எடுத்து வரும் நடவடிக்கையால், அங்கு  2050-ல் 2.2 சதவிகிதம், அதாவது  31.4 மில்லியன் குறையும் எனக் கூறப்படுகிறது.
 

Vikatan