Published:Updated:

உ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ

ராம் பிரசாத்
உ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ
உ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ
உ.பி.யில் துப்பாக்கி முனையில் நடக்கும் வாகன சோதனை - வைரலான வீடியோ

நம்மூரில், இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பறப்பதும் காவலர்கள் தங்களது பாணியில் தடுத்துநிறுத்துவதும் வாடிக்கைதான். சென்னை போன்ற பெருநகரங்களில், வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸாரிடமிருந்து தப்பிக்க, இளைஞர்கள் பல்வேறு யுக்திகளைக் கையாளுகின்றனர். வாகனச் சோதனைகளின்போது, சில குற்றவாளிகளும் காவலர்களின் வசம் சிக்குகின்றனர். ஆனால், உத்தரப்பிரதேச போலீஸாரின் வாகனச் சோதனை நம்மை திகிலடையச் செய்கிறது.  இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது.

 பாடான் பகுதியில் வாகனச் சோதனைக்காக நிற்கும் காவலர்கள், அப்பகுதியில் வரும் வாகன ஓட்டிகளை துப்பாக்கி முனையில் நிறுத்துகின்றனர். இதனால் பீதியடைந்த வாகன ஓட்டிகள் பயத்தில் ஆடிப்போயுள்ளனர். ஆண், பெண் என வித்தியாசமின்றி எல்லோருக்கும் கன் பாயின்ட் டிரீட்மென்ன்டுதான். சாலையில் வாகனத்தில் செல்லும்போது, போலீஸார் துப்பாக்கியை முனையில் எங்களைத் தடுத்துநிறுத்துகின்றனர். காவலர்களின் இந்தச்செயல் அச்சுறுத்துவதாகவும், அவமானகரமானதாகவும் உள்ளது என பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இதுகுறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசியுள்ள காவல்துறை அதிகாரிகள், பாடான் பகுதி, அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடைபெறும் பகுதியாகும். அதனால்தான் நாங்கள் எப்போதும் துப்பாக்கியுடன் இருக்கிறோம். வாகனச் சோதனையின்போது, எந்த வாகனத்தில் குற்றவாளிகள் வருகிறார்கள் எனத் தெரியாது. அதன் காரணமாகவே  இப்படிச் செய்வதாகக் கூறியுள்ளனர்.

 'இந்தச் சம்பவம்குறித்து விசாரித்து, தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம்' என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து தெரிவித்துள்ளனர்.

Vikatan