Published:Updated:

தமிழகத்துக்கு 40. டி.எம்.சி திறந்துவிட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

ராம் பிரசாத்
தமிழகத்துக்கு 40. டி.எம்.சி திறந்துவிட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
தமிழகத்துக்கு 40. டி.எம்.சி திறந்துவிட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்துக்கு 40. டி.எம்.சி திறந்துவிட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

காவிரி மேலாண்மை வாரியத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில்  குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது.  ஆனால், கர்நாடக அரசானது அந்த நீரை வழங்கவில்லை. தமிழக தரப்பில் இன்றைய கூட்டத்தில் இதுதொடர்பாக வலியுறுத்தப்பட்டது. இந்த மாத இறுதிக்குள்ளாவது வரையறுக்கப்பட்ட நீரை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் கர்நாடக அரசு மேக்கே தாட்டூவில் அணைகட்டுவது தொடர்பாகவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிலிகுண்டுலு பகுதியில் இருந்து ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்.சி தண்ணீரும், ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீர்ப்பங்கீடு தொடரும். காவிரியில் நீர் வரத்து மற்றும் மழையைப் பொறுத்து தமிழகத்துக்குத் தேவையான தண்ணீர் திறக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Vikatan