Published:Updated:

பீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்! - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

சத்யா கோபாலன்
பீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்! - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி
பீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்! - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

பீகார் மாநிலம் முழுவதும் வெயில் வாட்டி வருகிறது. அங்கு தற்போது 40 டிகிரி செல்சியஸ் வரை வெயில் உள்ளது. இந்த நிலையில்தான் ஒரு குறிப்பிட்ட நோய் காரணமாக முசாஃபர்பூரில் உள்ள மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்! - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

அனுமதிக்கப்பட்ட ஓரிரு தினங்களில் குழந்தைகள் ஒவ்வொன்றாக உயிரிழக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து நடந்த ஆய்வில்தான் அனைத்து குழந்தைகளும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதைக் கண்டுபிடிப்பதற்குள்ளாகவே இன்னும் பல குழந்தைகள் மருத்துவமனைகளுக்குக் குவியத் தொடங்கின. முதல் 48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் உயிரிழக்க அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு வாரத்தில் 54 என உயர்ந்தது. முசாஃபர்பூரில் மட்டும் இதுவரை 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பீகார் முழுவதும் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

பீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்! - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

முசாஃபர்பூர் மட்டுமல்லாது பீகாரின் பிற மாவட்டங்களிலும் பல குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், குழந்தைகளில் ரத்தத்தில் குளுகோஸின் அளவு மிகக் குறைவாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைப் பீகார் மாநில அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். விரைவில் அவர் முசாஃபர்பூர் சென்று நிலைமையை ஆராயவுள்ளார்.

பீகார் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்! - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி

இது பற்றி பேசிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ``பாட்னாவில் 12 குழந்தைகள் வெப்ப தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். மூளைக்காய்ச்சல் இல்லாமல், வெப்பத் தாக்குதலாலும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். வெப்பத் தாக்குதலால் குழந்தைகள் உயிரிழப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. 

குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். பீகார் மாநிலத்தில் அதிக வெப்பம் உள்ளதால் பிற்பகல் நேரங்களில் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். ஏனெனில், சூரிய வெப்பம் நேரடியாக மூளை மற்றும் உடலின் பிற பாகங்களையும் பாதிக்கிறது. 
முசாஃபர்பூரில் நிலைமையைச் சரிசெய்ய மத்திய அரசின் மருத்துவ குழு விரைந்துள்ளது. உயர்மட்ட நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத்திய அரசு தரப்பிலிருந்து பீகாருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்” எனத் தெரிவித்தார். 

Vikatan