Published:Updated:

`அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிமீது நடவடிக்கை எடுங்கள்!' - மோடிக்கு ரஞ்சன் கோகோய் கடிதம்! 

ஜெனிஃபர்.ம.ஆ
`அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிமீது நடவடிக்கை எடுங்கள்!' - மோடிக்கு ரஞ்சன் கோகோய் கடிதம்! 
`அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிமீது நடவடிக்கை எடுங்கள்!' - மோடிக்கு ரஞ்சன் கோகோய் கடிதம்! 

நீதிபதி நாராயண் ஷுக்லா, 2005-ம் ஆண்டு அலகாபாத் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். 2020-ம் ஆண்டு அவரது பனிக்காலம் நிறைவுபெறுகிறது. இந்நிலையில், 2017-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தாலும், இந்திய மருத்துவ கவுன்சிலாலும்  தடை விதிக்கப்பட்ட கல்லூரிக்கு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த சட்டத்திற்குப் புறம்பான உத்தரவில், ஊழல் நடந்திருப்பதாகவும், நீதிபதி நாராயண் ஷுக்லா முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அவர்மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. 

`அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிமீது நடவடிக்கை எடுங்கள்!' - மோடிக்கு ரஞ்சன் கோகோய் கடிதம்! 

நீதிபதி நாராயண் ஷுக்லா

Photo Courtesy : Khaskhabar 

இதனைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மூன்று நீதிபதிகள் அடங்கிய இந்த உள் விசாரணைக் குழு, நீதிபதி தீபக் மிஸ்ரா பணியிலிருந்த காலத்தில் அமைக்கப்பட்டது. இந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், நீதிபதி நாராயண் சட்டவிரோதமாக நடந்துகொண்டார் எனவும், நீதியை அவர் அவமதித்திருப்பதாகவும், நீதிபதி பதவியின் தகுதிக்கு எதிராகச் செயல்பட்டு, அவர் நம்பகத்தன்மையை இழந்திருப்பதாகவும் குறிப்பிட்டு, அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன. 

`அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிமீது நடவடிக்கை எடுங்கள்!' - மோடிக்கு ரஞ்சன் கோகோய் கடிதம்! 

நீதிபதி தீபக் மிஸ்ரா

அதனைத் தொடர்ந்து நீதிபதி தீபக் மிஸ்ரா, நாராயண் ஷுக்லாவிற்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பணிகளை நீக்கிவிட்டார். ஜனாதிபதியின் அலுவலகத்திற்கும்  நீதிபதி நாராயண் ஷுக்லாவை நீக்கக் கோரி கடிதம் அனுப்பினார். 

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகளை நீக்க வேண்டுமானால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணைக் குழு அவர்மீது குற்றங்கள் இருப்பதாக உறுதிசெய்யும் பட்சத்தில், அந்த அவையில், நீதிபதி மீதான குற்றம் விவாதிக்கப்பட்டு,  ஓட்டெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். பின்னர், மற்றோர் அவையிலும் அதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதிக்கு, குறிப்பிட்ட நீதிபதியைப் பணியிலிருந்து நீக்குமாறு கடிதம் அனுப்பப்படும். பின்னர், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், ஒரு நீதிபதி பணியிலிருந்து நீக்கப்படுவார். 

இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி  நாராயண் ஷுக்லா, சட்டத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டதால், அவர்மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி, அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கடிதம் எழுதியுள்ளார் என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

`அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிமீது நடவடிக்கை எடுங்கள்!' - மோடிக்கு ரஞ்சன் கோகோய் கடிதம்! 

நீதிபதி ரஞ்சன் கோகோய்

நீதிபதி நாராயண் ஷுக்லா பதவி நீக்கம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் ஒன்றாரை வருடங்களுக்கு முன்னரே அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர்மீது எந்த நடவடிக்கையும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை, இதுகுறித்து சமீபத்திய மக்களவை கூட்டத்தில், அமைச்சர் சஷி தரூர் குறிப்பிட்டுக் கேள்வியெழுப்ப, அதற்குப் பதிலளித்த அரசாங்கம், இதுகுறித்து தலைமை நீதிபதியின் கடிதம் கிடைக்கப்பெற்றது என்று பதிலளித்தது. ஆனால், இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Vikatan