Published:Updated:

மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன?

தமிழ் ஓவியா என்
மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன?
மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன?

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் பரவலான செய்தியாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து  மருத்துவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் தற்போது இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டு மருத்துவர்கள் போராட்டமாக மாறியுள்ளது.

மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன?

மருத்துவர்கள் தாக்கப்படுவதற்கான காரணம் என்ன?

பணத்தைப் பெற்றுக்கொண்டு சரியான மருத்துவக் கவனிப்பு இல்லை என்று உறவினர்கள் நினைப்பது திடீர் என ஏற்படும் உயிரிழப்பைத் தாங்க முடியாத உறவினர்கள் உயிரிழப்புக்குக் காரணம் மருத்துவரின் சரியான கவனிப்பின்மை என எண்ணுவது, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் நோயாளிகளைப் பார்ப்பதற்கு போதிய மருத்துவர்கள் இல்லாது இருப்பது, சில மருத்துவர்களின் அசால்ட்டான போக்கு, பணத்தையே பிரதானமாகப் பார்க்கும் சில மருத்துவமனைகளின் போக்கு இது போன்ற காரணிகள் எனப் பட்டியலிட முடியும். சமுதாயத்தில் மிக உன்னதமான மருத்துவத் தொழில் செய்யும் சில மருத்துவர்கள் பணத்தையே பிரதானமாகக் கொண்டு மருத்துவம் பார்ப்பது வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. எனவே, நோயாளியான உறவினருக்கு மருத்துவர்கள் சரியாக மருத்துவம் பார்க்கவில்லை என்ற எண்ணத்தினால்  மருத்துவர்கள் மீது தாக்குதல் நிகழ்கிறது. 

மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன?

சில வருடங்களுக்கு முன்திண்டுக்கல்லில் ஒரு தனியார் சிகிச்சைக்காக வந்த ஒரு நோயாளி இறந்தபோது மருத்துவமனையில் பிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தது.  அதை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம் செய்த பின் மருத்துவர்களுக்கு சட்டரீதியாகப் பணிப் பாதுகாப்பு வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது.  

இந்த மாதிரியான தாக்குதல் உணர்ச்சியின் அடிப்படையில் நடப்பது. இதைத் தடுப்பது மிகப் பெரிய சவால் என்று மருத்துவர் கருப்புசாமி கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, ``அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாமை பணிச் சோர்வு திடீர் என ஏற்படும். சீஸன் நோய்களால் மருத்துவமனைக்கு வரும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும்போது அங்குள்ள சில மருத்துவர்களால் என்ன செய்ய முடியும்? அங்கு திடீர் தலைவர்கள் தோன்றி மறியல், தாக்குதல் என்று போய்விடுகிறார்கள். இந்த மாதிரியான செயல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். கடுமையான சட்டங்கள் மூலம் இதைச் சரி செய்ய முடியாது. மருத்துவர்களும் மனிதர்கள்தான் என்பதைப் பொதுமக்களும் உணர வேண்டும்'' என்றார்.

மருத்துவர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் - காரணம் என்ன?

தீர்வு என்ன?

மேற்கு வங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்குப் பின் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய சட்டமியற்ற அறிவுறுத்தியுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் மருத்துவ வசதி கடைக்கோடி மனிதனுக்குச் சென்று சேர்வதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தரமான மருத்துவ வசதி கிராமப்புற மனிதனுக்கும் கிடைக்காத வரை சட்டத்தின் மூலம் இந்த மாதிரி பிரச்னைக்குத் தீர்வு காண முடியுமா என்பதைக் காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

Vikatan