Published:Updated:

`எண்ணிக்கை முக்கியமல்ல; செயல்பாடுதான் முக்கியம்!'- எதிர்க்கட்சி குறித்து மோடி

வெங்கட சேது.சி
பிரேம் குமார் எஸ்.கே.
`எண்ணிக்கை முக்கியமல்ல; செயல்பாடுதான் முக்கியம்!'- எதிர்க்கட்சி குறித்து மோடி
`எண்ணிக்கை முக்கியமல்ல; செயல்பாடுதான் முக்கியம்!'- எதிர்க்கட்சி குறித்து மோடி

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் இன்று முதல் முறையாக நாடாளுமன்றம் கூடுகிறது. புதிய உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர். இந்நிலையில் 17-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

பிரதமர் மோடி, முதல் உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மக்களவை உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்து வருகிறார்கள். நாளையும் எம்.பி-க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

எம்.பி-க்கள் பதவியேற்று முடிந்ததும், மக்களவைக்கு புதிய சபாநாயகர் தேர்வு வரும் 19-ம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வரும் 20-ம் தேதி உரையாற்றுகிறார். தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறார். 

`எண்ணிக்கை முக்கியமல்ல; செயல்பாடுதான் முக்கியம்!'- எதிர்க்கட்சி குறித்து மோடி

17-வது மக்களவையின் முதலாவது கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி,  ``இன்று புதிய நாடாளுமன்றம் கூடுகிறது. புதிய நம்பிக்கை மற்றும் புதிய கனவுகளுடன் தொடங்கவுள்ளது இந்தக் கூட்டத்தொடர். சுதந்திர இந்தியாவில் இந்த மக்களவைத் தேர்தலில் அதிக பெண்கள் வாக்களித்துள்ளனர். அதிக பெண் உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். 

பல ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது முறையாகத் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறோம். நாங்கள் சேவை செய்ய மக்கள் எங்களுக்கு மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறார்கள். நான் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பை விரும்புகிறேன். எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு என்பது ஜனநாயகத்தில் முக்கியமானது. எதிர்க்கட்சிகள் தங்களிடம் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து கவலை கொள்ள வேண்டாம். நாடாளுமன்றத்தில் அவர்களின் செயல்பாடுகள் ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார். 

`எண்ணிக்கை முக்கியமல்ல; செயல்பாடுதான் முக்கியம்!'- எதிர்க்கட்சி குறித்து மோடி

நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற 55 இடங்கள் தேவை. ஆனால், இரண்டாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 52 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் மோடி எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவம் குறித்துப் பேசியிருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.  

Vikatan