Published:Updated:

பதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய' பதிலடி!

ராம் பிரசாத்
பதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய' பதிலடி!
பதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய' பதிலடி!
பதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய' பதிலடி!

17-வது மக்களவையின்  முதல் கூட்டத்தொடர் நேற்று கூடியது. மக்களவை உறுப்பினர்கள், நேற்று முதல் பதவியேற்றுவருகின்றனர். முதல் நாளான நேற்று சர்ச்சையைத் தொடங்கிவைத்தார். போபால் தொகுதி எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர், சம்ஸ்கிருதத்தில் பதவிப்பிரமாணம் செய்து தனது பெயருடன்,  ‘பூர்ண சேத்தானந்த் அவ்ஷேனாந்த்’என்ற தனது குருவின் பெயரை, தனது பெயருடன் சேர்த்து உச்சரித்தார்.  இதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  தேர்தல் ஆணையர் வழங்கிய சான்றுக்குப் பின்னர் இந்தப் பிரச்னை முடிவுக்குவந்தது.

இரண்டாவது நாளாக இன்றும் உறுப்பினர்கள் பதவியேற்றனர். தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தமிழிலேயே பதவியேற்றுக்கொண்டனர். ‘தமிழ் வாழ்க’ என்ற முழக்கத்துடன் அவர்கள் பதவியேற்றனர். அப்போது பா.ஜ.க-வினர், ‘பாரத் மாதா கி ஜே’ என்றும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் கோஷமிட்டனர். 

இதனைத் தொடர்ந்து, அனைத்திந்திய மஜ்லிஸ்- ஈ- இத்ஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசியைப் பதவியேற்க வருமாறு சபாநாயகர் அழைத்தார். ஓவைசி,  நான்காவது முறையாக ஹைதராபாத்தில் வெற்றி வாகை சூடி எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ஓவைசி பதவியேற்க வந்தபோது பா.ஜ.க உறுப்பினர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்', 'பாரத் மாதா கீ ஜே', 'வந்தே மாதரம்' என முழங்கினர். ஓவைசி அலட்சியமாக,  சிரித்தவாறே இன்னும் சத்தமாகக் கூறுங்கள் என்பது போல் கையால் சைகை செய்தார். பின்னர் அவ,ர் உருது மொழியில் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பின்போது  ஜெய்பீம், தக்பீர் அல்லாஹு அக்பர், ஜெய்ஹிந்த் என்றார். இதனைத் தொடர்ந்து, 'வந்தே மாதரம்' என பா.ஜ.க-வினர் முழங்கினர். பதவியேற்பு விழாவையே பா.ஜ.க-வினர் போர்க்களம் போல் ஆக்கிவிட்டனர்.

பதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய' பதிலடி!

நாடாளுமன்றத்திற்கு வெளியே  செய்தியாளர்களைச் சந்தித்த அசாசுதீன் ஓவைசி, “ ஒருவகையில் இதுவும் நல்லதுதான் என நினைக்கிறேன். அவர்கள் என்னைப் பார்க்கும்போது இந்த நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வரும். அவர்கள் இந்த அரசியலமைப்பையும் முசாபர்பூரில் குழந்தைகள் இறந்த விவகாரத்தையும் நினைவில் வைத்திருப்பார்கள் என நம்புகிறேன். இந்த விவகாரத்தை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

Vikatan