Published:Updated:

பீகாரில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எங்கே போனார் தேஜஸ்வி யாதவ்? - விலகாத மர்மம்! 

பிரேம் குமார் எஸ்.கே.
பீகாரில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எங்கே போனார் தேஜஸ்வி யாதவ்? - விலகாத மர்மம்! 
பீகாரில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எங்கே போனார் தேஜஸ்வி யாதவ்? - விலகாத மர்மம்! 

பீகார் மாநிலத்தில் வரலாறு காணாத வெயில் வாட்டி வருகிறது. கூடவே மூளைக்காய்ச்சல் காரணமாகக் குழந்தைகள் பலியாகி வருகிறனர். மூளைக் காய்ச்சலால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 130 - ஐ தாண்டி விட்டது. பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து உள்ளனர். இப்படி மாநில அரசு தற்போது கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் வெளியில் தலைகாட்டவில்லை. 

பீகாரில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எங்கே போனார் தேஜஸ்வி யாதவ்? - விலகாத மர்மம்! 

மேலும் வரவாறு காணாத வெயில் காரணமாக முதியவர்கள் பலரும் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இரண்டு நாள்களுக்கு முன்னர், மூளைக்காய்ச்சால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை காணச் சென்ற முதல்வர் நிதிஷ் குமாரை கோ பேக் நிதிஷ் என்று சொல்லி தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர் பொதுமக்கள். 

பீகாரில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எங்கே போனார் தேஜஸ்வி யாதவ்? - விலகாத மர்மம்! 

இந்நிலையில் இது தொடர்பாகப் பேசிய ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஸ் பிரசாத் சிங், ``இந்த மாநிலத்தின் பொறுப்பு யாரிடம் இருக்கிறதோ அவரைதான் கேள்வி கேட்க முடியும். இப்போது அது நிதிஷ் குமாரிடம் இருக்கிறது. இந்த விஷயத்தைச் சரியான முறையில் கையாளாத அவர் பதவி விலக வேண்டும். பல வருடங்களாக அவர்களால் இதைச் சரி செய்ய முடியவில்லை. இதற்கான காரணத்தைக் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. 

சிலர் இது லிட்சி பழத்திலிருந்து வருகிறது என்கிறார்கள். சிலர் தற்போது நிலவும் கடுமையான வெயில் காரணமாக வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதுதான் காரணம் என்று அரசால் சொல்ல முடியவில்லை. மருத்துவமனையின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. மூக்கை மூடாமல் மருத்துவமனையைக் கடக்க முடிவதில்லை. மருத்துவமனை நரகமாகி வருகிறது” எனக் கடுமையாகச் சாடினார். 

ஆளும் மாநில அரசு தற்போது கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் வெளியே தலைகாட்டவில்லை. அவர் எங்கே போனார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது. சிலர் அவர் மக்களவை தேர்தல் தோல்வி காரணமாக டெல்லியில் முடங்கியுள்ளதாகவும் சிலர் சொத்து தொடர்பான வழக்கு ஒன்றுக்காக டெல்லியில் முகாமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் பரவின. 

பீகாரில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் எங்கே போனார் தேஜஸ்வி யாதவ்? - விலகாத மர்மம்! 

மாநிலத்தில் நிலவும் நெருக்கடியான நிலையில் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவர் மாயமாகியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படித்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ரகுவன்ஸ் பிரசாத் சிங்கிடம் கேட்டபோது, ``அவர் எங்கே சென்றிருக்கிறார் என எனக்கும் தெரியாது. ஒருவேலை அவர் உலகக் கோப்பை போட்டியைக் காணச் சென்றிருக்கலாம். எனினும் இது வெறும் யூகம்தான்...” என்றார். 

கட்சித் தலைவர் எங்கே என அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவருக்கே தெரியாதது மிகப் பெரிய சோகம் என்கின்றனர் தொண்டர்கள். கிரிக்கெட் விளையாட்டில் அதிக நாட்டம் கொண்டவர் தேஜஸ்வி யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ரகுவன்ஸ் பிரசாத் சிங் சொல்வது போல் அவர் இங்கிலாந்து சென்றுள்ளார் என்றால், மாநிலத்தில் நிலவும் மோசமான நிலைக்கு மத்தியில் இது அவசியமா என்ற கேள்வியும் எழுகிறது. 

Vikatan