Published:Updated:

`ராகுல் மட்டும் யோகா செய்திருந்தால்..!' - காங்கிரஸ் தோல்விக்கு ராம்தேவ் சொன்ன காரணம்

பிரேம் குமார் எஸ்.கே.
`ராகுல் மட்டும் யோகா செய்திருந்தால்..!' - காங்கிரஸ் தோல்விக்கு ராம்தேவ் சொன்ன காரணம்
`ராகுல் மட்டும் யோகா செய்திருந்தால்..!' - காங்கிரஸ் தோல்விக்கு ராம்தேவ் சொன்ன காரணம்

மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்விக்கு, யோகா குரு பாபா ராம்தேவ் புதிய விளக்கம் ஒன்றைக் கூறியுள்ளார். 

`ராகுல் மட்டும் யோகா செய்திருந்தால்..!' - காங்கிரஸ் தோல்விக்கு ராம்தேவ் சொன்ன காரணம்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. எனினும், காங்கிரஸ் கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்கான காரணம், பல்வேறு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது. தோல்விக்கான காரணம் தொடர்பாக ஆய்வு செய்ய குழுவும் அமைக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு புதிய காரணம் ஒன்றைத் தெரிவித்துள்ளார், யோகா குரு  பாபா ராம்தேவ்.

`ராகுல் மட்டும் யோகா செய்திருந்தால்..!' - காங்கிரஸ் தோல்விக்கு ராம்தேவ் சொன்ன காரணம்

பாபா ராம்தேவ் தற்போது, யோகா தின கொண்டாட்டத்துக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். நாளை நடைபெற உள்ள யோகா தினத்தில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொள்கிறார். இந்நிலையில், யோகாவின் பலன்கள்குறித்து அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். 

`ராகுல் மட்டும் யோகா செய்திருந்தால்..!' - காங்கிரஸ் தோல்விக்கு ராம்தேவ் சொன்ன காரணம்

அப்போது அவர், ``பிரதமர் மோடி தினசரி யோகா செய்பவர். பொதுவெளியிலே அவர் யோகா செய்கிறார். நேருவும் இந்திரா காந்தியும் மறைமுகமாக யோகா செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களைத்  தொடர்ந்து வந்துள்ள தலைவரான ராகுல் காந்தி ,யோகா செய்வது கிடையாது. இதன் காரணமாகத்தான் அவர் அரசியலில் தோற்றுப்போனார். யோகா செய்பவர் வாழ்வில் வெற்றிபெறுவர் ” என்றார். 

எனினும் அவரின் இந்த கருத்து, அவரின் முந்தைய கருத்துக்கே முரணாக இருக்கிறது. ஒருமுறை பாபா ராம்தேவ், சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தினசரி யோகா செய்வதாகச் சொல்லியிருந்தார். மேலும், ராகுல் காந்தியுடன் நட்புறவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது, அவரது கருத்துக்கே முரணாக 'ராகுல் யோகா செய்வதில்லை' என்று சொல்லியிருக்கிறார்.
 

Vikatan