Published:Updated:

போலீஸ் வண்டியில் உரசிய வேன்? - ஓட்டுநருடன் சாலையில் மல்லுக்கட்டிய காவலர்கள் #viralvideo

சத்யா கோபாலன்
போலீஸ் வண்டியில் உரசிய வேன்? - ஓட்டுநருடன் சாலையில் மல்லுக்கட்டிய காவலர்கள் #viralvideo
போலீஸ் வண்டியில் உரசிய வேன்? - ஓட்டுநருடன் சாலையில் மல்லுக்கட்டிய காவலர்கள் #viralvideo

வட மேற்கு டெல்லிப் பகுதியில் உள்ள முகர்ஜி நகரில் சில காவலர்கள் ஒரு வேன் டிரைவரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த போது அந்தப் பகுதியில் இருந்த பலரும் தங்கள் செல்போன்களின் எடுத்த வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

போலீஸ் வண்டியில் உரசிய வேன்? - ஓட்டுநருடன் சாலையில் மல்லுக்கட்டிய காவலர்கள் #viralvideo

அந்த வீடியோவில், `முகர்ஜி சாலையில், டெம்போ வேன் ஓட்டி வந்த ஒருவர் அங்கிருந்த காவல் நிலையத்துக்கும் வெளியே நின்றிருந்த போலீஸ் காரில் உரசியதாகக் கூறப்படுகிறது. இதனால் டிரைவருக்கும் போலீஸாருக்கும் இடையே வார்த்தை போர் நிலவுகிறது. டிரைவரை அங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு போலீஸார் காவல்நிலையத்துக்குள் சென்று இன்னும் பல காவலர்களை வெளியில் அழைத்து வருகிறார்.

போலீஸ் வண்டியில் உரசிய வேன்? - ஓட்டுநருடன் சாலையில் மல்லுக்கட்டிய காவலர்கள் #viralvideo

தன்னுடன் சண்டைபோட்ட காவலர் போய்விட்டதாக நினைத்து ஓட்டுநரும் அவரது மகனும் மீண்டும் தங்கள் வேன் நின்ற இடத்துக்குச் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் பிற காவலர்கள் வேகமாக ஓடிவந்து ஓட்டுநரை மடக்கியுள்ளனர். இதைக்கண்ட ஓட்டுநர் கண நேரத்தில் தன் வேனில் இருந்த அரிவாளை எடுத்து போலீஸார் முன் நீட்டியுள்ளார். அரிவாளைப் பார்த்ததும் அனைத்துக் காவலர்களும் விலகத் தொடங்கினர். 

போலீஸ் வண்டியில் உரசிய வேன்? - ஓட்டுநருடன் சாலையில் மல்லுக்கட்டிய காவலர்கள் #viralvideo

காவலர் உடையில் இல்லாத ஒருவர் சாதூர்யமாகச் செயல்பட்டு அரிவாள் வைத்திருந்த ஓட்டுநரின் பின்புறமாகச் சென்று அவரை மடக்கிப் பிடிக்கிறார். இதையடுத்து அனைத்துக் காவலர்களும் இணைந்து ஓட்டுநரின் கையில் இருந்த அரிவாளை வாங்க முயற்சி செய்கின்றனர். அதற்குள் காவலர்கள் பிடியிலிருந்து தப்பித்த ஓட்டுநர் மீண்டும் காவலர்களை நோக்கி அரிவாளைக் காட்டியுள்ளார். தொடர்ந்து ஒரு காவலரை தாக்கவும் செய்துள்ளார். பின்னர் அந்த இடத்தில் கூடிய அனைத்துக் காவலர்களும் ஓட்டுநரையும் அவரது மகனையும் சரமாரியாக லத்தியால் தாக்குகின்றனர். ஓட்டுநரின் மகனை நான்கு புறமும் பிடித்து வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்கின்றனர். காவலரைத் தாக்கிய ஓட்டுநரை வலுக்கட்டாயமாகச் சாலையில் இழுத்துச் செல்கின்றனர். 

போலீஸ் வண்டியில் உரசிய வேன்? - ஓட்டுநருடன் சாலையில் மல்லுக்கட்டிய காவலர்கள் #viralvideo

இந்த விடியோ பார்ப்பவரை பதறவைக்கும் விதமாக உள்ளது. இதில் காவலர் மீது தவறா அல்லது ஓட்டுநர் மீது தவறா என்ற தகவல்கள் இன்னும் தெரியவில்லை. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளதாகக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் `காவலர்கள்தான் என்னை முதலில் தாக்கினர். பின்னர்தான் நான் அரிவாளை எடுத்தேன்’ என ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநரைத் தாக்கியவர்கள் சப் - இன்ஸ்பெக்டர் சஞ்சய் மாலிக், தேவேந்திரன் மற்றும் கான்ஸ்டபிள் புஷ்பேந்திரா எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் மூவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 `முகர்ஜி நகரில் காவலர்கள் நடந்துகொண்ட விதம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும். மக்களைப் பாதுகாக்கவேண்டியவர்களே வன்முறையைக் கட்டவிழ்த்து விடக்கூடாது’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

போலீஸ் வண்டியில் உரசிய வேன்? - ஓட்டுநருடன் சாலையில் மல்லுக்கட்டிய காவலர்கள் #viralvideo
Vikatan