Published:Updated:

தாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை - இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை!

குணவதி

மறைவான இடங்களை உருவாக்கிக்கொடுப்பதற்குப் பதிலாக, மார்பகங்கள் பாலியல் ரீதியாக மட்டுமே பார்க்கும் உணர்வுநிலையை மாற்றவேண்டியது அவசியம்

தாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை - இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை!
தாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை - இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை!

வரும் ஜூலை மாதத்திலிருந்து, தாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டுவதற்கான தனியறை, பயணிகள் பயன்பாட்டிற்கெனத் திறந்தே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ”பொது இடங்களில் தாய்ப்பால் புகட்டுவதில் இந்தியர்களுக்கு இன்னும் தயக்கம் இருக்கிறது. தன்னிகரில்லாத இந்த சுற்றுலா தளத்தில், குழந்தையின் தாய் ஒருவர், தாய்ப்பால் புகட்ட சிரமப்பட்டுக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. தாய்ப்பால் புகட்டுவதற்கான அறை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என அப்போதுதான் முடிவெடுக்கப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை உயர் அதிகாரியான வசந்த் குமார் ஸ்வர்ன்கர். 

தாஜ்மஹாலில் தாய்ப்பால் புகட்டும் அறை - இந்திய நினைவுச் சின்னங்களில் இதுவே முதல்முறை!

2017-ம் ஆண்டில், தாய்ப்பால் புகட்டிய ஒரு பெண்ணை அவமதித்ததற்காக, லண்டனின் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியக நிர்வாகம் மன்னிப்பு கோரியது. ஸ்பெயினின் கோரல் டெல் கார்பன் நினைவுச் சின்னத்தில் தாய்ப்பால் புகட்டியதற்காக வெளியேற்றப்பட்டார், இன்னொரு பெண்மணி. இந்தியாவில் இத்தகைய சம்பவங்கள் பொது இடங்களிலும் சுற்றுலாத் தளங்களிலும் பல முறை ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 3,600-க்கும் அதிகமான நினைவுச் சின்னங்களில், முதல் தாய்ப்பால் புகட்டும் அறை தாஜ்மஹாலில் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

``மறைவான இடங்களை உருவாக்கிக்கொடுப்பதற்குப் பதிலாக, மார்பகங்கள் பாலியல் ரீதியாக மட்டுமே பார்க்கும் உணர்வுநிலையை மாற்றவேண்டியது அவசியம். பொது இடங்களில், பணியிடத்தில் குழந்தைக்கு பாலூட்டும் விஷயம் இயல்பானதாக மாற வேண்டும்” என தெரிவித்திருந்தார், 'கிருஹலெட்சுமி' பத்திரிகை ஆசிரியர் மோன்சி ஜோசஃப். இந்தியாவில், இதுவரை நடத்தப்பட்ட பெண்கள் பத்திரிகைகளில், அட்டைப்படத்தில் தாய்ப்பால் புகட்டும் பெண்ணின் படம் இடம்பெற்றது கிருஹலெட்சுமியில்தான். 

Vikatan